மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 63 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்

சென்னை: நடிகை "ராதிகா", "சரத்குமாரை" காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. ராதிகா அரசியலில் பல வருடங்களாக இருந்தாலும் தற்போது வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இப்படியான நிலையில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் மேடையில் இருக்கும்போது சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

actor Balakrishna who hugged and kissed Radhika on stage and Sarathkumar s action

அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. சின்னத்திரை வெள்ளித்திரை என்று கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ராதிகா அரசியலிலும் ஒரு கை பார்த்து விடலாம் என்று சில வருடங்களாகவே அதற்காக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சரத்குமாரும் நடிகராக மட்டுமல்லாமல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்துக் கொண்டார். இது இணையத்திலும் ரசிகர்கள் மற்றும் அவருடைய தொண்டர்கள் மத்தியில் அதிகமான அதிர்ச்சியை கொடுத்தது.

அதற்குப் பிறகு ராதிகா பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு சப்போர்ட்டாக அவருடைய கணவர் சரத்குமாரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அதைப்போல சமூக வலைத்தளத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா பற்றிய செய்திகள் அதிகமாக பகிரட்டும் பேசட்டும் வருகிறது. இந்த நிலையில் தான் சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான விருது விழா ஒன்றில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் கலந்து கொண்டனர். இதில் சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு விருது வழங்கி இருக்கின்றனர்.

actor Balakrishna who hugged and kissed Radhika on stage and Sarathkumar s action

அப்போது மேடைக்கு வந்த பாலகிருஷ்ணா முதலில் சரத்குமாருக்கு கை கொடுத்துவிட்டு நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து ஃபார்மலாக முத்தம் கொடுத்து இருக்கிறார். அப்போது பாலகிருஷ்ணாவிற்கு சரத்குமார் மைக்கை தர மறுத்திருக்கிறார். அதோடு ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து விட்டு என்னை கட்டி பிடிக்கவில்லை என்று பாலகிருஷ்ணாவை கலாய்த்து இருக்கிறார்.

actor Balakrishna who hugged and kissed Radhika on stage and Sarathkumar s action

அதற்கு பாலகிருஷ்ணா சிரித்தப்படியே மன்னிப்பு கேட்டு சரத் குமாரையும் கட்டிப்பிடித்து இருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் இப்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே நேற்று நடந்த பிரஸ் மீட்டிங்கில் சரத்குமார் சூரியவம்சம் திரைப்படத்தில் எப்படி நான் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அதுபோல என்னுடைய மனைவி ராதிகாவை எம்பி ஆக்குவேன் என்று பேசி இருந்தார்.

actor Balakrishna who hugged and kissed Radhika on stage and Sarathkumar s action

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே துறையில் நடிகர்களாக இருந்தாலும் எந்த இடத்திலும் இவர்களுக்குள் ஈகோவும் இல்லை, அதுபோல ஒருவரை ஒருவர் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இவர்களை கலாய்த்தும் கமாண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X