காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்!

By Mayura Akilan

Actor-Director Manobala's moment with Kamal
சினிமா கலைஞர்களுக்கு புகழ், பணம் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது. அது தவிர அவர்களை கடவுளாக மக்கள் கொண்டாடுகின்றனர் என்று இயக்குநரும், நடிகருமான மனோபாலா தெரிவித்தார்.

சன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் பேசிய மனோபாலா, இயக்குநராக, நடிகராக தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நடிக்கும் போது மட்டுமல்லாது, எப்பொழுதுமே சிரித்துக் கொண்டேதான் இருப்பேன், மற்றவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டேதான் இருப்பேன் என்று கூறிய மனோபாலா, சந்திரமுகி படத்தில் படிக்கட்டில் உருண்டு அடிவாங்கிய கதையையும், துப்பாக்கி படத்தில் கதாநாயகியிடம் அடிவாங்கிய கதையையும் நகைச்சுவையாக கூறினார்.

அரை வயிறுக்குத்தான் சாப்பிடுவேன்

உடலை ஒல்லியாக மெயின்டெயின் செய்வது எப்படி என்று தொகுப்பாளர்கள் கேட்டதற்கு, அரை வயிறுதான் சாப்பிடுவேன் அதனால்தான் பல ஆண்டுகளாக இப்படியே இருக்கிறேன் என்றார்.

மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோதும், அங்கிருந்து எஸ்கேப் ஆகி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறினார். பின்னர் அமைதியாக யாருக்கும் தெரியாமல் போய் பெட்டில் படுத்துக் கொண்டதாகவும் கூறினார் மனோபாலா.

நானுறு பாடங்கள்

40 படங்கள் இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது 400 படங்கள் வரை நடித்திருக்கிறேன். இதற்கு காரணம் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனோபாலா, அவர்தான் நட்புக்காக படத்தில் தன்னை ஒரு முழு நேர நடிகராக அறிமுகம் செய்தார் என்றார்.

ஜாக்கிரதையா இருக்கணும்

சினிமா உலகில் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் சறுக்கிவிடும் என்று கூறிய அவர், வடிவேலு இரண்டு ஆண்டுகளாக படமில்லாமல் இருப்பது கவலையளிப்பதாக கூறினார். இப்போது அவர் கதாநாயகனாக நடிக்க வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அவருக்கு உடனே தொலைபேசியில் வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார் மனோபாலா.

கமலுடனான நட்பு

ஆழ்வார் பேட்டை வீட்டில்தான் நாங்கள் வளர்ந்தோம். எனக்கும் கமலுக்கும் மிகப்பெரிய நட்பு இருந்தது. அது ஒரு சமயத்தில் முறிந்து போனது. 14 வருடமாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. விஸ்வரூபம் பிரச்சினையில் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கமல் பேசியதைக் கேட்டு கலங்கிப் போனேன். இதனால் அவர் என்ன வேண்டுமானாலும் திட்டட்டும் என்று நினைத்து அவரை சந்தித்து ஆறுதல் சொல்லப் போனேன். ஆனால், நானும் அவரும் சந்தித்த போது இருவரும் பேச வார்த்தையின்றி கண்ணீர் விட்டு அழுதோம் என்றார் மனோ பாலா.

பாலாவும், ஷங்கரும்...

இயக்குநர் பாலா, ஷங்கர் படத்தில் நடித்த காட்சிகளைப் பற்றி நகைச்சுவையாக குறிப்பிட்ட மனோ பாலா அவர்களின் நுண்ணியமான இயக்கத்தினை குறிப்பிட்டார். மணிக்கணக்கில் பயணம் செய்து போய் ஒரு காட்சியில் நடித்தாலும் மனதிற்கு மனநிறைவு தரும் என்றார் அவர்.

சந்தானத்தின் நகைச்சுவை

சந்தானத்தின் நகைச்சுவை பற்றிய பேசிய மனோபாலா, அவர் திட்டினாலும் நான் கவலைப் படமாட்டேன். ஏனென்றால் நகைச்சுவைக்காகத்தானே அதெல்லாம் பேசுகின்றனர். காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான், தீய்ஞ்சு போன டயர் மாதிரி இருக்கான் அப்படி எல்லாம் டயலாக் வைப்பதனால் தனக்கு கைத்தட்டல் அதிகம் கிடைப்பதாக தெரிவித்தார்.

வாலியின் ரசிகன் நான்

40 படங்களின் இயக்குநர், 400 படங்களில் நடித்துள்ள அனுபவம் இருந்தும் எப்படி தலைக்கணம் இல்லாமல் இருக்கீறீர்களே என்று கேட்டனர் தொகுப்பாளர்கள். அதற்கு அவர், 'அடக்கமாகும் வரை அடக்கமாக இரு' என்ற வாலியின் வரிகள்தான் அதற்குக் காரணம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X