பாக்கியா இதுவரைக்கும் பார்த்தது குக் வேலைதான்.. மனதை உடைத்த கோபி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்த தொடர் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என்ற மூன்று கேரக்டர்களை மையப்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர் ஒட்டுமொத்த டிஆர்பியில் இரண்டாவது இடத்திலும் விஜய் டிவியில் முதலிடத்திலும் காணப்படுகிறது.

அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு பரிசளித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சீரியல்களுக்கும் கொடுத்து வருகிறது. இந்த சேனலின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி சேனலின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி.

3 கேரக்டர்கள் + காதல்

3 கேரக்டர்கள் + காதல்

கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்கள் அவர்களுக்குள்ளான காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த காட்சிகளை அரங்கேற்றி வருகிறது. இந்தத் தொடரில் காதலி மற்றும் குடும்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி வந்த கோபியின் குட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிப்பட்டது.

குற்றவாளி கூண்டில் கோபி

குற்றவாளி கூண்டில் கோபி

இதையடுத்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார் கோபி. காதலி ராதிகா அவரை விட்டுவிட்டு அவரது காதலை கைநழுவிவிட்டு மும்பை செல்லவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து மனைவி பாக்கியாவோ, அவர் கேட்ட விவாகரத்தையே கொடுத்துவிட்டார். இதையடுத்து கதை அதிகமாக சூடு பிடித்துள்ளது.

பாக்கியாவின் சின்ன சின்ன ஆசை

பாக்கியாவின் சின்ன சின்ன ஆசை

விவாகரத்து பெற்ற கையோடு, தனக்கு பிடித்தவற்றையெல்லாம் அரங்கேற்ற நினைக்கிறார் பாக்கியா. சிறப்பான ஹோட்டல் ஒன்றில் நிறைவாக சாப்பிடுகிறார். வெளியில் வந்து காவலருக்கு டிப்ஸ் கொடுக்கிறார். இதன்மூலம் தனது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.

பாக்கியாவை வெளியேற்றத் துடிக்கும் கோபி

பாக்கியாவை வெளியேற்றத் துடிக்கும் கோபி

தொடர்ந்து தனது வீட்டிற்கு வரும் அவர், கணவனின் நிராகரிப்பை எதிர்கொள்கிறார். அவரை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார். தன்னுடைய மகளின் கதறலை பார்த்து அவளுக்கு தான் சிறந்த அம்மாவாகவும் அப்பாவாகவும் இருப்பேன் என்று கோபி கூறுகிறார்.

பாக்கியா சமையல்காரி மட்டுமே

பாக்கியா சமையல்காரி மட்டுமே

தொடர்ந்து தன்னுடைய மனைவி இதுவரை அந்தக் குடும்பத்தில் ஒரு சமையல்காரியாக மட்டுமே செயல்பட்டதாகவும் வீட்டின் வேலைக்காரி செல்விக்கும் அவளுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்றும் கூறி பாக்கியாவின் மனதை நோகடிக்கிறார். ஆனாலும் எதையும் பேசிக் கொள்ளாத பாக்கியா தன்னுடைய அறைக்கு சென்று தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வருகிறார்.

 பாக்கியாவை நோகடித்த கோபி

பாக்கியாவை நோகடித்த கோபி

இத்துடன் இந்த எபிசோட் நிறைவடைந்துள்ளது. ஆனால் இந்த எபிசோடில் தொடர்ந்து பாக்கியாவையும் அவரை எப்படியெல்லாம் நோகடிக்கலாம் என்பதையும் கங்கணம் கட்டிக் கொண்டு நிறைவேற்றுகிறார் கோபி. இதன்மூலம் பார்க்கும் ரசிகர்களின் கோபத்தை வாங்கி கட்டிக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X