Jayam Ravi: ஜெயம் ரவி ஏக்கம்.. மிரட்டியதாக கீர்த்தி சுரேஷ் புகார்.. சைரன் இசை ரிலீசில் சுவாரஸ்யம்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் சைரன். வரும் 16ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த படத்தில் அப்பா மற்றும் மகள் உறவு கதைக்களமாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு சமுத்திரக்கனி உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களின் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் ஆண்டனி பாக்யராஜ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். அவர் முன்னதாக சில படங்களில் உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். சைரன் படம் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக அவர் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவரது சைரன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வரும் 16ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்து பிரமோஷன்கள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. முன்னதாக படத்தின் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.
சைரன் ஆடியோ ரிலீஸ்: இதில் ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்று படத்தின் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தனர். கீர்த்தி சுரேஷ் படத்தின் இசை வெளியீட்டில் மிகவும் சிறப்பான லுக்கில் வந்திருந்தார். அவரது லுக் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இன்னும் சில தினங்களை உள்ள நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் தன்னுடைய மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவரிடம் விஜய் நடிகர் விஜய்யின் அரசியல் என்று குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி தான் தற்போது கோயிலில் உள்ளதாகவும் தன்னுடைய படம் குறித்து ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
ஜெயம் ரவியின் மகள் குறித்த ஏக்கம்: முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்களை பேசிய ஜெயம்ரவி, தனக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி பார்த்துக் கொள்வேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் தான் செயல்பட்டதாக தெரிவித்தார். படத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மகளின் அன்பு குறித்த பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஜெயம்ரவிக்கு இரு குழந்தைகளும் ஆண்கள் என்ற நிலையில், அவருக்கு பெண் குழந்தை இல்லாத ஏக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது அண்ணன் மோகன் ராஜாவும் தெரிவித்திருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பு: சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நாளைய தினம் விஜய் டிவியில் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த பிரமோஷன் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னை ஜெயம் ரவி தொடர்ந்து மிரட்டியதாக தெரிவித்திருந்தார். பொது நிகழ்ச்சிகளில் தன்னை பார்க்கும்போதெல்லாம், தன்னுடன் இணைந்து எப்போது படத்தில் நடிப்பாய் என்று அவர் தொடர்ந்து மிரட்டியதாகவும் தற்போது அவருடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து முடித்துள்ளதாகவும் அவர் இந்த பிரமோவில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











