Bigg boss 8: பிக்பாஸ் அடுத்த சீசனில் மீண்டும் ஹோஸ்ட்டாக களமிறங்கும் கமல்ஹாசன்.. அப்போ விஜய்சேதுபதி?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்து வருகிறார். இவரது படங்கள், அதன் கதைக்களங்கள் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா படம் அவரது 50வது படமாக மாஸ் காட்டியது.

இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ட்ரெயின், ஏஸ் என படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஒருபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடி சரவெடியாக கலக்கி வருகிறார். இவரையும் இவரது பேச்சையும் கேட்பதற்காகவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

televisiion kamal haasan vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார். ஹீரோவாக,வில்லனாக, கேரக்டர் ரோல்கள் என எந்த வித்தயாசமும் இல்லாமல் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது 50வது படமான மகாராஜா படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகளின் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு கதைக்களத்தை இயக்குநர் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விடுதலை 2, ஏஸ், ட்ரெயின் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: இதனிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த சிறப்பான களங்களுடன் பயணித்து வருகிறது. குறிப்பாக வாரயிறுதி நாட்களில் விஜய் சேதுபதியின் எபிசோட்களை ரசிகர்களை விரும்பி பார்க்கின்றனர். வாரயிறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி அதிகரித்து காணப்படுகிறது. இந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து வைல்ட் கார்ட் போட்டியாளர் வர்ஷினி வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த வாரம் சாச்சனா தான் வெளியேறவிருந்ததாகவும் ஆனால் மகாராஜா படத்திலிருந்து வெளிவராத விஜய் சேதுபதி அவரை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

விலகிய கமல்ஹாசன்: இந்த நிகழ்ச்சிக்காக 10 லட்சம் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களை ஹோஸ்ட் செய்த நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு பதிலாக நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்து வருகிறார். கமல்ஹாசனுக்கு இந்த நிகழ்ச்சிக்காக 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவரது விலகலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டன. கடந்த சீசனில் இவரது ஹோஸ்ட்டிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதும் காரணமாக கூறப்பட்டது.

மீண்டும் கமல்ஹாசன்: ஆனால் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக சென்றுள்ள கமல்ஹாசன், அதன் காரணமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவர் அடுத்த சீசனில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு தற்போது கூறியுள்ளார். கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பான நகர்தலுக்கு காரணமாக அமைந்த கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்தால் விஜய் சேதுபதியின் நிலை என்ன என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X