உலக நாயகனின் குடும்ப பொங்கல்.. சன்டி.வியில் கொண்டாட்டம்

சென்னை : தனது சிறு வயதில் இருந்து தற்போது வரை நடித்து கொண்டு இருப்பவர் கமல்ஹாசன். பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது கலைதாகத்தால் பல வித்தியாசமான படங்களில் நடித்து உள்ளார். பல படங்களில் நடித்து வரும் இவர் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.

மூன்று முறை தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன், டாக்டர், செவாலியர் என பல விருதுகள். இவர் சினிமா மட்டுமல்லாது அரசியல் கட்சியும் தொடங்கியுள்ளார். சினிமாவில் அனைத்து துறைகளிலும் வேலை செய்யும் ஒரு நபர் கலை உலகின் சகலகலா வல்லவன்.

Actor kamal haassan special show at sun tv

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். பல வருடங்களாக சின்னத்திரையில் கால் பதிக்காதவர். பிக் பாஸ் என்ற ஷோவை தொகுத்து வழங்கி அதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை மூன்று சீசன்களாக தொகுத்து வழங்கினார்.

Actor kamal haassan special show at sun tv

தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு சன் டிவி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது குடும்பத்தினர் உடன் இணைந்து பொங்கலை கொண்டாடுகிறார். இதனை சன் டிவியே அறிவித்துள்ளது.

Actor kamal haassan special show at sun tv

இதில் அவரின் அண்ணா சாருஹாசன் மற்றும் அவரின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். மேலும் திரை பிரபலங்கள் பலருடன் இணைந்து கமல்ஹாசன் பொங்கலை கொண்டாட உள்ளார். பொங்கல் அன்று கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப்போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X