நான் ஏன் மீசையை எடுத்துட்டேன்? அப்படி மட்டும் நினைச்சுடாதீங்க! வேற காரணம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க இருக்கும் கமல் அதற்கான புரமோவில் கொடுத்திருக்கும் ஓபனிங்கே அட்டகாசமாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். அப்போது வாரம் தோறும் நடக்கும் சம்பவங்களை பொறுத்து பாராட்டுவதும் கோபப்படுவதும் அறிவுரை வழங்குவதுமாக உள்ளார்.

தேவைப்படும் சமயத்தில் குறும்படத்தை போட்டு முகத்திரையை கிழித்து உண்மையை உரக்க சொல்வார். நியாயத்திற்கு வக்காலத்து வாங்குவதாகவும் கூறுவார்.

முக்கோண காதல்

முக்கோண காதல்

கடந்த இருவாரங்களுக்கு முன்பு முக்கோண காதலாக இருந்தால் பிரச்சனைதான் என்று கூறி கவினை கழுவி ஊற்றினார். அப்போது கவினும் இனிமேல் அப்படி நடக்காது என உறுதியளித்தார்.

பெரும் பஞ்சாயத்து

பெரும் பஞ்சாயத்து

ஆனால் அவர் சொன்னதை ஃபாலோ செய்யவில்லை. மீண்டும் சாக்ஷி, லாஸ்லியா என இருவரிடமும் மாறி மாறி கடலை போட்டார். இதனால் இந்த வாரத்தில் பெரும்பாலும் கவின், சாக்ஷி, லாஸ்லியா குறித்த பஞ்சாயத்தே பெரிதாக இருந்தது.

மீசையின்றி செம ஃபிரஷ்

மீசையின்றி செம ஃபிரஷ்

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கவுள்ளார் கமல். இதற்கான முதல் புரமோவில் பேசியுள்ள கமல், மீசையின்றி செம ஃபிரஷாக வந்துள்ளார்.

பெட்டுல தோத்துட்டேன்

பெட்டுல தோத்துட்டேன்

மீசையை எடுத்தது குறித்தும் கமல் விளக்கம் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது, மனங்கள் மாறாலம், குணங்கள் மாறலாம், இங்கே இனிமே முக்கோண காதலுக்கு வழியே இல்லை, இனிமே எல்லாமே நட்பாவே இருக்கும், அப்படின்னு பெட் கட்டி தோத்து போயி மீசையை எடுத்துட்டேன்னு நீங்கெல்லாம் நினைக்கலாம்.

வேற காரணம்

வேற காரணம்

ஆனா அது இல்லீங்க வேற காரணம் என அவர் ஸ்டைலில் சொல்லாதது போல் சொல்லி அசத்தினார் கமல். இதனைக்கேட்ட ரசிகர்கள் கையை தட்டி ஆரவாரம் செய்தனர். தான் சொல்லவந்ததை சொல்லாததை போல சொல்லி கவின் ஆட்டத்தை ஆட்டம் காண வைத்துள்ளார் கமல்.

ஜூஸ் பிழிவாரா?

ஜூஸ் பிழிவாரா?

பார்ப்போம் இன்று இரவு யாரை பிழிந்து ஜூஸ் போடப் போகிறார் கமல் என்று. பிக்பாஸ் வீட்டில் அத்தனை சமாச்சாரங்கள் இந்த வாரத்தில் அரங்கேறியிருக்கின்றன. சரவணனை சாடுவாரா கமல் அல்லது கடந்த வாரத்தை போல சிரித்தப்படியே கடந்து விடுவாரா என்பது இன்று இரவு தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X