நம்மலும் கொடுப்போம்ல பிராது.. இன்னைக்கு நைட்டு மீராவுக்கு சங்குதான்! மிரட்டும் கமல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil:Kavin Bad Behaviour:Losகாக Sakshiயை Jail அனுப்பும் Kavin

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மீது பாலியல் புகார் கூறிய மீராவை இன்று இரவு நடிகர் கமல்ஹாசன் தாளிக்க போகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டது. கீரிப்பட்டி, பாம்பு பட்டி என்ற கிராமங்களின் ஊர் நாட்டாமைகளாக சேரனும் மதுமிதாவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

விளையாட்டின் போது சேரனின் கை மீரா மீது பட்டுவிட்டது. இதனை பெரிய விஷயமாக திரித்துக்கூறிய மீரா சேரன் வேண்டுமென்றே தன் வயிற்றில் கை வைத்தார் என்றும் அந்த இடத்தில் கை வைக்க என்ன அவசியம்? பெண்கள் இருந்த இடத்தில் அவருக்கு என்ன வேலை என கேள்விகளை எழுப்பி அதிர வைத்தார்.

சத்தியம் செய்த சேரன்

சத்தியம் செய்த சேரன்

இதனால் அதிர்ச்சியடைந்தது சேரன் மட்டுமல்ல பார்வையாளர்களும்தான். மேலே கை வைத்தது உண்மை என்று கூறிய சேரன், அதில் எந்த தவறான நோக்கமும் இல்லை என கண்ணீர் விட்டு தனது குழந்தைகளின் மீது சத்தியம் செய்தார்.

கண்ணீர்விட்டு கதறிய சேரன்

கண்ணீர்விட்டு கதறிய சேரன்

ஆனாலும் விடாத மீரா சேரனை தொடர்ந்து அட்டாக் செய்தார். இதனை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத சேரன் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு கதறினார்.

கண்ணீர்விட்ட பார்வையாளர்கள்

கண்ணீர்விட்ட பார்வையாளர்கள்

இப்படி கேவலமான குற்றச்சாட்டை தன் மீது கூறிய நிலையில் இனி இந்த வீட்டில் தன்னால் இருக்க முடியாது என்று கதறிய சேரன், என் பெயர் இப்படி கெட்டால் என் மகள்களின் வாழ்க்கை கெட்டுவிடும் என கண்ணீர் விட்டார். சேரன் அழுததை பார்த்து பார்வையாளர்களும் அழ தொடங்கிவிட்டனர்.

ஓரளவுக்கு நிம்மதி

ஓரளவுக்கு நிம்மதி

மீரா கூறிய குற்றச்சாட்டு தொடர்பான வீடியோவையும் நெட்டிசன்கள் வெளியிட்டு மீராவை கிழித்தனர். பிறகுதான் சமூக வலைதளங்களில் இருந்த பார்வையாளர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி வந்தது.

அகம் டிவி வழியே

அகம் டிவி வழியே

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை அகம் டிவி வழியே சந்திக்கவுள்ளார். இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தீராத பிரச்சனையைக் கூட தீர்த்து வைக்கும் இடம் கிராம சபைன்னு நம்பிக்கிட்டுருக்க ஆள் நான்.

நம்மலும் கொடுப்போம்ல

நம்மலும் கொடுப்போம்ல

உள்ள என்ன பண்ணாங்கன்னு பாத்திங்கள்ல ஊர் நாட்டாமையே போட்டு நொறுக்கிப்புட்டாய்ங்க. அவரும் நொறுங்கிட்டாரு..நம்ம பாத்துட்டு சும்மாவா இருப்போம்.. நம்மலும் கொடுப்போம்ல.. பிராது.. இன்னைக்கு நைட்டு பாருங்க என கிராமத்து ஸ்லாங்கில் மிரட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

பார்வையாளர்கள் வேண்டுகோள்

பார்வையாளர்கள் வேண்டுகோள்

ஆக சேரன் மீது பொய் பிராது கொடுத்த மீராவை இன்று இரவு வச்சு செய்யப்போகிறார் நடிகர் கமல்ஹாசன். குறும்படம் போடுவாரா? மீரா கூறிய குற்றச்சாட்டுகளை ஒன்று பிசகாமல் அப்படியே போட்டு சைடு பை சைடு வீடியோவையும் ஒளிபரப்ப வேண்டும் என்பதே பார்வையாளர்களின் தாழ்மையான வேண்டுகோள்.. செய்வாரா பிக்பாஸ்?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X