twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் மேடையில் இஸ்ரோவுக்கு சல்யூட் அடித்த கமல்.. பாகிஸ்தானையும் விளாசினார்!

    |

    சென்னை: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் வெற்றியை மிகவும் அருகில் நெருங்கினோம் என்று கூறி பிக்பாஸ் மேடையில் இஸ்ரோவுக்கு சல்யூட் அடித்தார் நடிகர் கமல்ஹாசன்.

    நேற்று அதிகாலை நிலவில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் இருந்த போது, விக்ரம் லேண்டரை நிலவில் இறக்குவதற்கான சிக்னல் அதிகாலை 1.38 மணிக்கு, தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது லேண்டருடனான தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.இதனால் விஞ்ஞானிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

    நாடே சோகம்

    நாடே சோகம்

    விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் இஸ்ரோ தலைவர் சிவன், கண்ணீர்விட்டு அழுதார். இந்த காட்சிகள் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டன. இதனால் நாடே சோகமானது. ஆனாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் சிவனுக்கும், இஸ்ரோவுக்கும் வாழ்த்து கூறியது.

    கடுப்பான மக்கள்

    கடுப்பான மக்கள்

    ஆனால் பாகிஸ்தான் அறிவியல்துறை அமைச்சர் இஸ்ரோ அனுப்பிய பொம்பை நிலவில் இறங்குவதற்கு பதில் மும்பையில் இறங்கிவிட்டது, போய் தூங்குங்கள் என நக்கலடித்திருந்தார். இதனால் கடுப்பான இந்திய மக்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    கமல் பாராட்டு

    கமல் பாராட்டு

    இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களை சந்தித்த கமல் இஸ்ரோவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இது ஒரு சறுக்கல், தோல்வி என நக்கலடிக்கும் அண்டை நாடுகளுக்கு நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் பாகிஸ்தானை விளாசினார்.

    ட்ரான்ஸ்போர்ட் நிறுவனமா?

    ட்ரான்ஸ்போர்ட் நிறுவனமா?

    இந்தியர்களுக்கு இது ஒரு தோல்வியே இல்லை. இது ஒரு ஆராய்ச்சி நிறுவனம், உங்களை சந்திரமண்டலத்தில் இறக்கிவிட்டுவிடுகிறோம் டிக்கெட் எடுக்குறீங்களா என்று கேட்கும் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்ரேஷன் அல்ல, அதில் ஒரு தவறு நடந்திருந்தால் கிண்டலடிக்கலாம் நக்கலடிக்கலாம். இது ஒரு ஆராய்ச்சி நிறுவனம். இதில் சோதனை செய்துதான் பார்க்க முடியும்.

    நெருப்பு கோளம்

    நெருப்பு கோளம்

    அமெரிக்கா ரஷ்யா போன்ற பெரிய பெரிய நாடுகள், இந்தப் பாதையில் பெரிய விபத்துகள் தடங்கல்களை சந்தித்திருக்கின்றன. புறப்படும்போதே வெடித்து சிதறி நெருப்பு கோளாமாய் காட்சியளித்தையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

    நெருங்கிவிட்டோம்

    நெருங்கிவிட்டோம்

    லட்சம் மைல்களில் வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில் மறைந்துவிட்டோம். வெற்றியை அவ்வளவு நெருங்கிவிட்டோம். விரைவில் தடம் பதிப்பார்கள் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையை திருவாளர் சிவன் குழுவினருக்கும் தெரிவிப்போம். இந்த மேடையில் சொன்னால் உங்களை சேரும் என்று நம்புகிறோம்.

    மேடையில் சல்யூட்

    மேடையில் சல்யூட்

    விரைவில் அந்த இரண்டு கிலோ மீட்டரை எமோஷனலாகவும் டெக்னிக்கலாகவும் தொட்டுவிடுவீர்கள் என நம்புகிறோம் என்று கூறினார் கமல். மேலும் உங்களால் பெருமை கொள்கிறோம் என்று கூறி இஸ்ரோவுக்கு பிக்பாஸ் மேடையில் சல்யூட் அடித்தார் கமல்.

    கற்றல் தருணம்

    இதனிடையே நடிகர் கமல்ஹாசன் அவரது டிவிட்டர் பக்கத்திலும், இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இது தோல்விக்கு சமமானதல்ல. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு கற்றல் வளைவு இருக்கும்.இது, அந்த விலைமதிப்பற்ற கற்றல் தருணம். நாங்கள் விரைவில் சந்திரனில் இருப்போம், இஸ்ரோவுக்கு நன்றி. இஸ்ரோவை இந்த தேசம் நம்புகிறது மற்றும் பாராட்டுகிறது. இவ்வாறு கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Read more about: isro இஸ்ரோ
    English summary
    Actor Kamal hassan salutes ISRO on the stage of Biggboss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X