பிக் பாஸ் 3: அசத்தும் ஈழத் தமிழில் கதைத்து கலக்கிய கமல்ஹாசன்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ஈழத் தமிழில் அழகுற கதைத்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விஜய் டிவியில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் 2 சீசன்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் தொடங்கியுள்ளது நிர்வாகம்.
மூன்றாவது சீசனையும் மற்ற இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அரசியல், சினிமா என படுபிஸியாக உள்ள நிலையிலும் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நேரம் ஒதுக்கியுள்ளார் கமல்.

இலங்கை தமிழ் பெண்
நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழரும் செய்தி வாசிப்பாளருமான லொஸ்லியா இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். முன்னதாக அவர், கமலிடம் உரையாடினார்.

கமலாகவே கதைக்கிறேன்
அப்போது கமலின் நடிப்பில் வெளியான தெனாளி படம் குறித்து பேசிய லொஸ்லியா, கமல் தெனாளி படத்தில் ஈழத் தமிழில் பேசிய வசனங்களை பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நாள் கமல்ஹாசனாகவே கதைக்கிறேன் என்று கூறிய கமல், ஈழல் தமிழில் பேசி பட்டையை கிளப்பினார்.

முழுக்க முழுக்க அரசியல்
ஆனால் என்ன முழுக்க முழுக்க அரசியலையே ஈழத் தமிழில் கதைத்தார் கமல். கமல் கதைத்த ஒவ்வொன்றும் நச். கட்சி ஆரம்பிக்காத போதே கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அரசை விளாசி வந்தார் கமல்.

அனலை கக்கும் கமல்
தற்போது கட்சி ஆரம்பித்து கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியுமிட்டுவிட்டார் கமல். ஆகையால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி தொடர்பான அனலை கக்குவார் என தெரிகிறது.

பஞ்ச தந்திரத்தில் பதிலடி
ஜெயலலிதாவுக்கு பிறகு திரைத்துறையில் அதிக மொழிகளை தெரிந்த நடிகர்களில் ஒருவர் கமல் ஹாசன். பஞ்ச தந்திரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒவ்வொரு மொழியை சேர்ந்த தனது நண்பர்களின் மனைவியிடம் அவர்களின் மொழியில் பேசியே பதிலடி கொடுப்பார்.

ஈழத் தமிழில் அசத்திய கமல்
பஞ்ச தந்திரம் படத்தின் அந்தக் காட்சியை இன்றும் ரசிக்க மறக்காதவர்கள் இல்லை. அதே போல் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணிடம் கமல் ஹாசன் ஈழத் தமிழில் பேசி அசத்தியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











