பாவம்யா.. அக்கா முகமே மாறிப்போச்சு! இன்றும் வனிதாவை வச்சு செய்யும் கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை நேற்று ரோஸ்ட் செய்த கமல் இன்றும் வச்சு செய்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்திருக்கும் வனிதா, எல்லோர் விஷயங்களிலும் தன்பாட்டுக்கு மூக்கை நுழைத்து வீட்டை ரணகளப்படுத்தி வருகிறார்.

வனிதா வந்தது முதல் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயம் வெடித்து வருகிறது. கடந்த வாரம் ஷெரின்- தர்ஷன் இடையிலான உறவுக்குள் மூக்கை நுழைத்து பிரச்சனையை உருவாக்கினார்.

வனிதாவை வறுத்த கமல்

வனிதாவை வறுத்த கமல்

இந்நிலையில் இந்த விவகாரத்தை நேற்று கையிலெடுத்து கமல்ஹாசன், வனிதாவை வறுத்தெடுத்தார். அடுத்தவங்க விஷயத்தில் தலையிட்டால் நமது மூக்குதான் உடையும் என்றும் அவர் அட்வைஸ் கூறினார்.

மூக்கை உடைத்த கமல்

மூக்கை உடைத்த கமல்

ஆனாலும் ஷெரின் தன்னிடம் அழுது தனது ஃபீலிங்ஸை வெளிப்படுத்தியதாக கூறி தான் செய்தது சரிதான் என்று கூறினார். விடாத கமல், வனிதாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் வார்த்தைக்கும் தக்கபதிலடி கொடுத்து மூக்கை உடைத்தார்.

இன்றைய புரமோ

இன்றைய புரமோ

இதுதான் சாக்கென்று ஹவுஸ்மேட்ஸ்களும் சுற்றி நின்று வனிதாவை, விளாசி எடுத்தனர். இந்நிலையில் இன்றைய புரமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.

சத்தமில்லாமல் சென்றார்

சத்தமில்லாமல் சென்றார்

அதிலும் கமல்ஹாசன், வனிதாவைதான் வச்சு செய்துள்ளார். அதாவது, வழக்கமாக அகம் டிவி வழியே அகத்திற்குள் என்று மியூசிக்கோடு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார். ஆனால் இன்று எந்த சத்தமும் இல்லாமல் அகம் டிவி வழியே சென்றுவிட்டார்.

சமாளித்த சாண்டி

சமாளித்த சாண்டி

இதனை அறியாத சாண்டி ஒய்யாரமாக சோபாவில் படுத்துத் தூங்கினார். பின்னர் கமல் டிவி வழியாக பார்த்ததை அறிந்த சாண்டி அடித்து பிடித்து எழுந்தார். இதுகுறித்து என்ன ரகுநாத சாண்டி என்று கமல் கேட்டபோது ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாக கூறி சமாளித்தார் சாண்டி.

வனிதாவிடம் பர்மிஷன்

வனிதாவிடம் பர்மிஷன்

அப்போது கமல் வழக்கமாக மியூக் போட்டுவிட்டு உள்ளே வருவோம், ஆனால் இப்போது போடாமல் போய்விட்டோம் என்றார். கமல் பேசிக்கொண்டிருக்கும் போதே வனிதா குறுக்கிட்டார். அதற்கு கமல் ப்ளீஸ் நான் கொஞ்சம் பேசிக்கிறேனே, இல்லாட்டி மறந்துவிடும் என்று கூறி வனிதாவிடம் பர்மிஷன் கேட்டார்.

என்ஜாய் செய்த மக்கள்

என்ஜாய் செய்த மக்கள்

வனிதாவும் சரி தொடருங்கள் என்று கூற பேச தொடங்கிய கமல், சொல்ல வந்ததை சொல்லாமல் மறந்துட்டேன் போங்க என்று கூறினார். இதனை என்ஜாய் செய்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

மாறிப்போன முகம்

மாறிப்போன முகம்

கமல் அப்படி சொல்லவும் வனிதாவின் முகமே மாறிப்போய்விட்டது. நேற்றும் அவரை ரோஸ்ட் செய்தார் கமல். அதே வேலையை இன்றும் தொடர்ந்துள்ளார். வனிதா யார் பேசுவதற்கும் நேரம் கொடுக்காமல் மற்றவர்கள் பேசுவதையும் கேட்காமல் இருப்பதாக பேச்சு உள்ளது. இந்நிலையில் அதனை மனதில் வைத்தே கமல் இப்படி வனிதாவை அசிங்கப்படுத்திவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X