எதிர்பார்த்தது கிடைக்கல.. அடுத்து இதை செய்யப் போகிறேன்.. கார்த்திக் ராஜ் பரபரப்பு வீடியோ
சென்னை : என்னை பிடிச்சவங்க கண்டிப்பா எனக்காக இதை செய்வாங்கன்னு நினைச்சேன் .ஆனா நான் எதிர்பார்த்தது கிடைக்கல என்று கூறியுள்ளார் நடிகர் கார்த்திக் ராஜ்.
நான் நினைத்தது நடக்கவில்லை என்றால் , எனக்கு பணம் அனுப்பிய அனைவருக்கும் அதை திருப்பி அனுப்பி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்குத் தேவையான பணம் கிடைக்கிறதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்க்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செம்பருத்தி கார்த்திக்
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஆதி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் வலம் வந்த கார்த்திக் ராஜ் தற்போது அந்த சீரியலை விட்டு வெளியேறிய பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் .இந்த வீடியோக்கள் தான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது .அதுவும் தற்போது இவர் பேசியதை கேட்டதும் பலர் அவருக்கு ஆதரவினை கமெண்ட் களில் தெரிவித்து வருகின்றனர்.

பெருகிய ஆதரவு
சில நாட்களுக்கு முன்பு இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் .அதில் தான் புதுப்பட சூட்டிங் பற்றிதான் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன் .ஆனால் தற்போது அப்படி நடக்க விடாமல் சிலர் தடுத்து கொண்டிருக்கின்றனர் .என்னை எந்த படமும் எடுக்க விடாமல் அவர்கள் வேலை செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சவால் விடுகிறார்கள்
உன்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது என என்னிடம் சவால் விட்டு இருக்கின்றனர் .அதனால் தான் கே ஸ்டுடியோ என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து அதில் தன்னுடைய புது படத்தை எடுக்கப் போவதாக கூறியிருந்தார் .அதற்கு அதிகமாக பணம் தேவைப்படுவதால் அதனை தன்னால் ரெடி பண்ண முடியாது .அதனால் தன்னுடைய ரசிகர்கள் உங்களால் முடிந்ததை எனக்கு அனுப்புங்கள் என தன்னுடைய வங்கி டீடெயில்ஸ்களையும் பகிர்ந்திருந்தார்.

எனக்கு உதவுங்கள்
ஆனால் தற்போது அவர் எதிர்பார்த்த அளவிற்கு பணம் இன்னும் கிடைக்க வில்லையாம். அதனால் மீண்டும் ஒரு வீடியோ போட்டு இருக்கிறார் . அதைப்பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார் . தனக்கு பணம் அனுப்பின ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் இதனை என்னால் சொல்ல முடியாது என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

ரூ. 2 கோடி தேவை
அதில் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என அனைவரும் கூறுகின்றனர் . நான் புதிதாக துவங்க இருக்கும் திரைப்படத்திற்கு ஒன்றரை முதல் இரண்டு கோடி ரூபாய்தான் தேவைப்படுகிறது .அதற்கு என்னுடைய ரசிகர்கள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் அனுப்பினால் தாராளமாகப் போதும். ஆனால் நான் எதிர்ப்பார்த்த அளவிற்கு பணம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை .

இன்னும் ஒரு வாரம்
அதனால் இந்த ஒரு வாரமும் வெயிட் பண்ணி பார்க்க போகிறேன் என்று கூறிக்கொண்டு அப்படி கிடைக்கவில்லை என்றால் தான் வேறு வழி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். தான் எதிர்பார்த்த அமௌன்ட் கிடைக்கவில்லை என்றால் தனக்கு பணம் அனுப்பி உதவி செய்த ரசிகர்களின் அக்கவுண்டிற்கு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுவேன் என்று கூறியிருக்கிறார் .எப்படியாவது தான் சாதித்துவிட வேண்டும் என துடிப்போடு இருக்கும் இவருக்கு இவருடைய ரசிகர்கள் ஆதரவாக பல கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











