அப்பா ஸ்தானத்தில் பார்த்த எம்.ஜி.ஆர்.. ஆனால் நான் செஞ்ச செயல்.. மனம் வருந்திய குண்டு கல்யாணம்

சென்னை: நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம் நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அத்தோடு தன்னுடைய தந்தை மறைவிற்குப் பிறகு எம்ஜிஆர் தனக்கு என்னெல்லாம் உதவி செய்தார் என்றும் தான் அவர் ஆசைப்பட்டதை செய்ய முடியாமல் போய்விட்டது என்பது பற்றியும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

 Actor Kundu Kalyanam has shared a lot of information about MGR

இந்த நிலையில் குண்டு கல்யாணம் பேசியதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

சினிமாவாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் சரி ஒரு சிலருடைய பெயரை சொன்னதும் ரசிகர்களுக்கு டக்கென்று நினைவிற்கு வந்துவிடும். அந்த வகையில் பிரபலமானவர்தான் குண்டு கல்யாணம். இவர் திரைப்படங்களில் காமெடி நடிகராக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். அதோடு உடல் எடை அதிகமாக இருந்தாலும் அதையும் தன்னுடைய ப்ளஸ் ஆக மாற்றி பலரை சிரிக்க வைத்ததில் வல்லவராகவும் இருந்திருக்கிறார்.

அதனால்தான் ஆரம்ப காலகட்டத்தில் இவர் அதிகமான படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் திடீரென்று அரசியலில் சேர்ந்த பிறகு சினிமாக்களில் அதிகமாக நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கி இருந்தார். அதிலும் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2இல் கெஸ்ட் ரோலில் இவரும் நடித்திருந்தார்.

அதற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுபோல 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த குண்டு கல்யாணம் சினிமாவை தாண்டி தீவிரமான அதிமுக தொண்டராக இருந்துள்ளார். தன்னுடைய மேடைப்பேச்சு மூலமாக அதிமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார்.

1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது வேறு எந்த வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம விட்டு வட்டு எல்லோரும் அரசியல் பணி செய்ய வேண்டும் என்று சொன்னதால் இவர் சினிமாவை விட்டு விலகி முழுக்க முழுக்க தேர்தலுக்காக உழைத்திருக்கிறார். பிறகு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது சிறுநீரக சிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பல நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் உதவி கேட்டிருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்க்கு பண உதவி கிடைக்காததால் ஆபரேஷனை தள்ளி வைத்திருக்கிறாராம். இந்த நிலையில் அவர் எம்ஜிஆர் பற்றி பேசுகையில் எம்ஜிஆரின் திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டராக நடித்து பெயர் எடுத்தவர் தான் குண்டு கருப்பையா. இவர் எம்ஜிஆர் மீது அதிகமான பாசம் கொண்டிருந்தவர். ஆனால் திடீரென்று அவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தை எம்ஜிஆர் தன்னுடைய குடும்பமாகவே தத்தெடுத்துக் கொண்டாராம்.

குண்டு கருப்பையாவின் மூன்று மகன்களில் மூத்த மகனை தன்னோடு வைத்துக் கொண்டு, இரண்டாவது மகனை அரசியலில் பயன்படுத்திக் கொண்டாராம். மூன்றாவது மகன் குண்டு கல்யாணம் தான். ஆனால் அவரை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆர் உடைய ஆசையாக இருந்திருக்கிறது. அதற்கான படிப்பு செலவுகளை ஆரம்பத்தில் இருந்து எம்ஜிஆர் தான் கவனித்துக் கொண்டாராம்.

ஆனால் நடிப்பின் மீது கொண்ட ஆசையின் காரணமாக படிக்காமல் குண்டு கல்யாணம் நடிக்க வந்து விட்டாராம். அதுவும் முதல் முதலில் பாலச்சந்தர் நாடகத்தில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு அவன் அவள் அது என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானாராம். ஆனால் அது எம்ஜிஆருக்கு தெரியாதாம். அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே குண்டு கல்யாணத்திற்கு வேறொரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 Actor Kundu Kalyanam has shared a lot of information about MGR

இந்த பற்றி எப்படியாவது எம்.ஜி.ஆர் கிட்ட சொல்ல வேண்டும் என்று குண்டு கல்யாணம் நினைத்திருந்த நேரத்தில் ஒரு விழாவிற்கு எம்ஜிஆர் வந்திருக்கிறார். அவரிடம் குண்டு கல்யாணம் தான் நடிப்பதை பற்றி சொல்ல எம்ஜிஆர் கடும் கோபத்தில் முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாராம். அதற்குப் பிறகு குண்டு கல்யாணம் எம்ஜிஆரை பார்க்கவே இல்லையாம். பிறகு முத்தா சீனிவாசன் தயாரித்த ஒரு படத்தில் குண்டு கல்யாணம் நடித்திருந்தாராம்.

முத்தா சீனிவாசனை பொருத்தவரைக்கும் எந்த படம் எடுத்தாலும் அதை முதலில் எம்ஜிஆர் பார்க்க வேண்டும் என்று நினைப்பாராம். அதுபோல அந்த படத்தை எம்ஜிஆருக்கு போட்டு காட்டி இருக்கார். எம்ஜிஆரும் அவருடைய மனைவி ஜானகி அம்மாளும் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

அப்போது குண்டு கல்யாணம் வரும் காட்சிகளை பார்த்து எம் ஜி ஆர் விழுந்து விழுந்து சிரித்தாராம். அதற்கு பிறகு குண்டு கல்யாணத்திற்கு போன் செய்த ஜானகி அம்மா, எம்ஜிஆர் படத்தை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். நீ இன்னும் நன்றாக வருவாய் என்று பாராட்டினார் என்று சொன்னாராம். ஆனாலும் தான் எம்ஜிஆர் ஆசைப்பட்ட மாதிரி டாக்டராக முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்தோடு அந்த பேட்டியில் குண்டு கல்யாணம் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X