விஜய் டிவி நிகழ்ச்சியில் மகளை பற்றி கூறி கதறி அழுத மதுரை முத்து... நிகழ்ச்சியில் சோகம்

சென்னை : விஜய் டிவியின் சூப்பர் டாடி நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மதுரை முத்துவும் ஒரு போட்டியாளராக தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனல் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

சூப்பர் டாடி நிகழ்ச்சி

சூப்பர் டாடி நிகழ்ச்சி

விஜய் டிவி சிறப்பான பல நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல்வேறு பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கிடையில் சூப்பர் டாடி நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிரம்மாண்ட இறுதிப்போட்டி

பிரம்மாண்ட இறுதிப்போட்டி

வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனல் நடைபெறவுள்ளது. குழந்தைகள் கொண்டாடும் வகையில் ஒரு சூப்பரான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருந்தது. பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

ப்ரோமோ வெளியீடு

ப்ரோமோ வெளியீடு

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பல்வேறு டாஸ்க்குகளை தங்களது குழந்தைகளுடன் இணைந்து அவர்கள் செய்தனர். நிகழ்ச்சியில் இந்த டாஸ்க்குகளை சரியாக செய்யாதவர்கள் தொடர்ந்து எலிமினேட் ஆனார்கள். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இறுதி நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

மதுரை முத்து கண்ணீர்

மதுரை முத்து கண்ணீர்

இந்த பிரமோவில் மதுரை முத்து தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு தனது வீட்டில் நடந்த விஷயங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இவரது மனைவி விபத்து ஒன்றில் இறந்த நிலையில், தன்னுடைய மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்ததன் கஷ்டத்தை அவர் இந்த பிரமோவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மதுரை முத்து மனவருத்தம்

மதுரை முத்து மனவருத்தம்

இதையடுத்து பக்கத்து வீட்டின் பெண்மணியை உதவிக்கு அழைத்ததாகவும் கூறி தனது மனவருத்தத்தை பதிவு செய்தார். அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறியதையும் பிரமோவில் பார்க்க முடிந்தது. தற்போது மதுரை முத்து நித்தி என்பவரை மறுமணம் செய்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X