நடிகர் மனோபாலாவின் தயிர் ஊறுகாய் பிள்ளையார பாத்தீங்களா?!
சென்னை: நடிகர் மனோபாலா தயிர் மற்றும் ஊறுகாயை வைத்து உருவாக்கிய தயிர் பிள்ளையார் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மனோ பாலா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். தமிழ் சினிமாவில் இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 19 டிவி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் சங்க பணிகளிலும் தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் மனோ பாலா தனது கை வண்ணத்தில் தயிர் மற்றும் ஊறுகாயை வைத்து பிள்ளையாரை உருவாக்கியுள்ளார். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார்.
அவரது இந்த தயிர் ஊறுகாய் பிள்ளையாரை பலரும் லைக் செய்துள்ளனர். சிலர் கிரியேட்டிவிட்டி என அவரது திறமையை புகழ்ந்து டிவிட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று தட்டில் தயிர் ஊறுகாயை வைத்து பிள்ளையாரை உருவாக்கி அசத்தியிருக்கிறார் மனோ பாலா. யானை முகத்துடன் உள்ளது மனோ பாலாவின் தயிர் பிள்ளையார்.


Click it and Unblock the Notifications











