Mohan: வெள்ளி விழா நாயகன் மோகன் பங்கேற்ற சூப்பர் சிங்கர் 10 ஷோ.. மீண்டும் கிடாரை கையிலெடுத்த மோகன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது பத்தாவது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்து சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் யுவன் சங்கர் ராஜா ஹிட்ஸ் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்தினர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பல தனித்துவமான பாடல்களை அவர்கள் பாடி அசத்திய சூழலில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுதினம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோக்களால் ரசிகர்களை விஜய் டிவி திணறடித்து வருகிறது.

Television Vijay TV Mohan

சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சூப்பர் சிங்கர் சீனியர் மட்டுமில்லாமல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் ஏராளமான ரசிகர்களின் விருப்ப பட்டியலில் உள்ளது. தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் மனோ, சித்ரா, சுஜாதா உள்ளிட்டவர்கள் நடுவர்களாக மாஸ் காட்டி வருகின்றனர். நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மிகச் சிறப்பான வகையில் பாடல்களை போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்றனர்.

சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்: ஒவ்வொரு போட்டியாளரின் பாடல் தேர்வு மற்றும் பாடும் முறைகளில் மிகச் சிறப்பான அனுபவ முதிர்ச்சி காணப்படுகிறது. சிறப்பாக ட்ரெயின் செய்து விஜய் டிவி இவர்களை பாடவைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதேபோல ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு தீமை மையமாகக் கொண்டும் பாடல்களை போட்டியாளர்கள் பாடி வருகின்றர். அந்த வகையில் இந்த வாரம் யுவன் சங்கர் ராஜா ஹிட்சை பாடி போட்டியாளர்கள் அசத்தியுள்ளனர். மேலும் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக 90களில் வெள்ளிவிழா நாயகன் மோகன் பங்கேற்றுள்ளார்.

மீண்டும் மோகன் கையில் கிடார்: நடிகர் மோகனை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் மிகச் சிறப்பாக வரவேற்று அவரை பல்வேறு விஷயங்களின் சுவாரஸ்யங்களை பேச வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் நடிகர் மோகன் ஒவ்வொரு போட்டியாளரின் பாடலையும் மிகச் சிறப்பான வகையில் என்ஜாய் செய்ததை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. நடிகர் மோகனின் பல படங்கள் பாடல்களுக்காகவே வெள்ளிவிழா கண்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரது இதய கோயில் உள்ளிட்ட பல படங்கள் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் கிடார் நாயகனான மோகனை மீண்டும் கிட்டார் வாசிக்க வைத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அழகு பார்த்தது.

மோகன் ஹிட்சை பாடிய போட்டியாளர்கள்: மேலும் மோகனின் பல பாடல்களை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அல்லாத மற்ற சிறுவர்கள் பாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள சூழலில் நாளை மற்றும் நாளை மறுதினம் மாலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. திறமையுடன் வலம்வரும் பல இளைஞர்களின் பாடகர் கனவை சிறப்பாக வெளிக்கொண்டு வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சீசனிலும் இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X