லஷ்மிக்கும் எனக்கும் இருந்த உறவு.. ஏமாற்றிவிடுவேன் என்கிற பயம்.. மோகன் சர்மா ஓபன் டாக்!
சென்னை: பிரபலமான நடிகரான மோகன் சர்மா, நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். சட்டகாரி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் நடித்து இருக்கிறார். இவர் நடிகை லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்தும், பிரிந்தது குறித்தும் வெளிப்படையாக பேசி உள்ளார்.
Touring Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இவர், மலையாள திரைப்படமான சட்டக்காரி படத்தில் நானும் லட்சுமியும் சேர்ந்து நடித்த போதெல்லாம் எங்களுக்குள் எந்த விதமான ஈர்ப்பும் இல்லை. அதன் பிறகு, ஒரு சில திரைப்படங்களில் நானும் லட்சுமியும் சேர்ந்து நடித்த போதுதான் எங்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டானது. இது சினிமாவில் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம் தான். அப்படித்தான் எங்களுக்குள் உறவு ஏற்பட்டது. பிரபலமான நடிகையாக இருந்த லட்சுமி திடீரென என்னை காதலிக்கிறேன் என்று சொன்னதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் காதலை சொன்னதும், யாரையாவது திருமணம் செய்து கொள்ளதானே போகிறோம் என்று நானு ஓகே சொல்லிவிட்டேன். நான் நடிகையை திருமணம் செய்து கொண்டதை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. பின் அம்மாவை போராடி காப்பாற்றினோம்.

மோகன் சர்மா: இப்படி போராட்டத்திற்குப் பின் ஆரம்பித்த எங்களின் திருமண வாழ்க்கை ஐந்து ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. அதே வீட்டில் தான் ருக்மணி அம்மா, லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா என அனைவரும் இருந்தோம். அவர்களுடன் என்னால் ஒத்துப்போக முடியிவில்லை. திடீரென ஒரு நாள் எனக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவே இல்லை. இதனால் ஒரு பெட்டியில் என்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு காரில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி, நான் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த அலுவலகத்திற்கு சென்று அங்கேயே தங்கி விட்டேன் அதுதான் நான் லட்சுமியை கடைசியாக பார்த்தது. இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் என்றாலும், இருவரும் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று, இருவருக்குமே தோன்றவில்லை, எதனால் எந்த வித பேச்சு வார்த்தையும் நடக்கவே இல்லை. திருமணத்திற்கு முன், இருவரும் உறவில் இருந்த போதே, நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிற பயம் லட்சுமிக்கு இருந்தது. திருமணத்திற்கு பின்பும் அந்த பயம் மாறவே இல்லை அப்படியேத்தான் இருந்தது.

ஒரு நடிகர் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ளும் போது நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம். அப்படி சில விஷயங்களை விட்டுக்கொடுக்க எங்கள் இருவராலும் முடியவில்லை. இதனால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவர் வழியில் அவர் சென்றார். என் வாழ்க்கை வேறுவிதமாக சென்றுவிட்டது. என்னை பொருத்தவரை எந்த நடிகராக இருந்தாலும் அவர் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்கிறேன் என்றால் அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். அப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் மிகப்பெரிய அட்ஜஸ்ட்மென்ட் இருக்க வேண்டும், இருவருக்குள் புரிதல் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் இல்லை என்றால் வாழ்க்கையே வீணாகி விடும் என்று நடிகர் மோகன் சர்மா அந்தபேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











