Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிக் பாஸ் சீசன் 5... நீங்களும் கலந்துக்குறீங்களா... சொல்லக்கூடாது சஸ்பென்ஸ் என்ற பிரபல நடிகர் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ந் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில், விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிலா உள்ளிட்ட பலரின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் பட்டியலில் உள்ளது.
டாப் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே...வைரலாகும் அஜித் மச்சினியின் கிளாமர் ஃபோட்டோ
தற்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான நிழல்கள் ரவியும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.

நிழல்கள் ரவி
1980ம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான நிழல்கள் திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ரவிசந்திரன். காதலில் விழுந்த ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்திருந்தாலும், இவரால் பெரிய கதாநாயகனாக வர முடியவில்லை.

திறமையான நடிகர்
நிழல்கள் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து தனது பெயரை நிழல்கள் ரவி என வைத்துக்கொண்டார். இதையடுத்த, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று வலம் வந்தார் நிழல்கள் ரவி. அவர் நடித்த வேதம் புதிது, நாயகன், சின்னத்தம்பி பெரியதம்பி, அண்ணாமலை, மறுபடியும் மற்றும் ஆசை உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார்.

நிழல்கள் ரவி பிக் பாக்ஸில்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இருக்கும் நிழல்கள் ரவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்து இருக்கிறது. ஆனால் அதில் நான் கலந்து கொள்கிறேனா... இல்லையா என்பது சஸ்பென்ஸ் என்று கூறினார். எந்த தகவலையும் வெளியில் சொல்லக் கூடாதுனு சொல்லி இருக்காங்கனு கூறினார். இதனால் நிழல்கள் ரவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.
Recommended Video

அக்டோபர் 3ந் தேதி
பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்றும், அந்த போட்டியில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் 3ந் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 5 பிரம்மாண்ட தொடங்கும் என்ற அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி அறிவித்தது.

கட்டாயம் தடுப்பூசி
இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . மேலும் அவர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் விதியில் சேர்க்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பலரின் பெயர் உத்தேசமாக கூறி வரும் நிலையில் நிழல்கள் ரவியின் பெயரும் தற்போது அடிபட்டு வருகிறது.