Pasupathy: குணசேகரனுக்கு பதிலாக களமிறங்கும் குசேலன் பட நடிகர்.. திணறலில் டீம்!

சென்னை: சன் டிவியில் மிகச்சிறப்பான டிஆர்பியை பிடித்து முதலிடத்தில் உள்ள தொடர் எதிர்நீச்சல்.

திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தத் தொடரில் ஒவ்வொரு கேரக்டரும் மிகச்சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்துவந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து, சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அந்த கேரக்டரில் யாரை அடுத்ததாக நடிக்க வைப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

Actor Pasupathy going to Replace Marimuthu in Ethirneechal serial?

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக களமிறங்கும் நடிகர் பசுபதி: இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடரில் அனைத்து கேரக்டர்களும் அவர்களின் பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி உள்ளிட்ட அம்சங்களும் மிகச்சிறப்பாக அமைந்து தொடரை வெற்றிப்பெற செய்து வருகிறது. தொடர்ந்து அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்று சேனலின் முன்னணி தொடராக எதிர்நீச்சல் இருந்து வருகிறது.

இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வந்தார் பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். தொடருக்கான டப்பிங் பணியில் அவர் ஈடுபட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தானே காரை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் மாரிமுத்து. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிகழ்வு அனைத்து தரப்பினரையும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.

இந்நிலையில், சீரியலில் அவருக்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து தற்போது சீரியல் குழு குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதி குணசேகரன் என்ற இந்த கேரக்டர் சீரியலின் மிகவும் முக்கியமான கேரக்டராக அமைந்துள்ளது. இந்த தொடர் இந்த அளவிற்கு வெற்றிப் பெற்றதற்கு இந்த கேரக்டரும் அதை சிறப்பான வகையில் கொண்டுவந்த மாரிமுத்துவும் முக்கிய காரணமாக அமைந்தனர்.

தற்போது மாரிமுத்து மறைவையொட்டி அடுத்த குணசேரகன் தேர்வில் சரியான முடிவெடுக்க முடியாமல் சீரியல் குழுவினர் திண்டாடி வருகின்றனர். தமிழின் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தியை இந்த கேரக்டருக்காக சீரியல் தரப்பு அணுகியபோது, அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சீரியலில் ராதாரவி நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த லிஸ்ட்டில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

ரஜினியுடன் குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பசுபதி, ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருசில எபிசோட்களில் மாரிமுத்து நடித்துள்ள நிலையில், விரைவில் இந்த கேரக்டருக்கான மாற்று நடிகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடியான சூழல் தற்போது சீரியல் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X