மகாபாரத வசனத்தை பேசி டிக்டாக்.. இணையத்தில் கலக்கும் சகுனி.. லைக்குகளை அள்ளும் பிரனித் பட் !

மும்பை : மகாபாரத வசனத்தை டிக் டாக்கில் பேசி இணையத்தில் பதிவிட்டுள்ளார் பிரனித் பட்.

பொதுவாகவே திரைப்படம் ஆனாலும் சரி. சீரியல்கள் ஆனாலும் சரி அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை பொதுவாக ஹீரோ-ஹீரோயின்கள் போன்ற கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது மக்களின் இயல்பு.

Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet

ஆனால் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அதாவது வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை அவர்களின் நடிப்பு எவ்வளவுதான் ஈர்க்கும் வகையாக இருந்தாலும் படங்களையோ அல்லது சீரியல்கள் பார்க்கும் போது அவர்களின் நடிப்பு பார்த்து நாம் அவர்களை திட்டுவது உண்டு.

ரசிகர்கள் திட்டினால் தான் அவர்களின் வெற்றி என்றே சொல்லலாம் . சீரியல்களுக்கும், படங்களுக்கும் இந்த நிலைமை என்றால் இதிகாச தொடர்களில் வரும் வில்லன்களை பற்றி யோசித்துப் பாருங்கள். ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு சவால்கள் அதிகம் என்றும் சொல்லலாம்.

Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதத்தில் வரும் சகுனி என்ற கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்திருப்பார் பிரனித் பட். மகாபாரதத்தை பார்க்கும் போதெல்லாம் அவரை திட்டாதவர்கள் இருக்க முடியாது.

அந்த அளவுக்கு உண்மையிலேயே ஒரு சகுனி தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் அப்படி உள்வாங்கி நடித்திருப்பார். ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டு , சுருட்டை முடியுடன் இருக்கும் அவருடைய உருவத்தைப் பார்க்கும்போதே இவர் வில்லன் தான் என்று சொல்லும் அளவிற்கு சூப்பராக அந்த கேரக்டருக்கு பொருந்தி இருப்பார்.

Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet

பொதுவாகவே ஒரு கதாபாத்திரத்தை பார்க்கும்போது நமக்கு ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்திற்கு வரும் உதாரணத்திற்கு பஞ்சபாண்டவர்களில் நாம் நினைக்கும் போது நியாயம், தர்மம் போன்ற முக்கியமான விஷயங்கள் நினைவுக்கு வரும் .

அதுபோல கிருஷ்ணரை நினைத்தால் அமைதியும், நியாயமும் அவர் அருமையான பேச்சும் நம் அனைவருக்கும் புல்லரிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில் நாம் சகுனி என்று எடுத்துக் கொண்டால் பழிவாங்குதல், துரோகம் தான் நம் நினைவுக்கு வரும்.

Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet

கிருஷ்ணர் வரும் காட்சியோ அல்லது பஞ்சபாண்டவர்கள் காட்சி டிவியில் ஒளிபரப்பாகும் போது கிடைக்கும் டிஆர்பியை விட சகுனி வரும் போது வரும் டிஆர்பி அதிகம் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் நடிப்பு அனைவர் மனதையும் ஈர்த்திருக்கிறது.

இன்றும் சகுனி என்று சொன்னால் பிரனீத் பட் மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வருகிறது. அவர் பேசும் வசனங்கள் ராஜ உடைகள் அனைத்தும் அணிந்து கொண்டு பேசுவதை நாம் அறிவோம். ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் அவர் வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் பல பல டிக் டாக்குகள் செய்து வருகிறார்.

Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet

அந்த டிக் டாக்கில் மகாபாரதத்தில் வரும் பல டயலாக்குகளை சகுனி கேரக்டர் எப்படி இருக்குமோ அதே போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்தான் அதில் அவர்களுடைய ராஜ உடையுடன் இருப்பார். இந்த வீடியோக்களில் அவர் கேஷுவல் உடையில் இருக்கிறார்.

தனது வீட்டில் பல பல வித்யாசமான டிக் டாக் செய்து அதனை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். மகாபாரதத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் அவர் வீட்டில் இருந்தபடியே டயலாக்குகளை பேசி பேசி பார்க்கிறார்.

Actor Praneet Bhatt has shared Tiktok video on the internet

அவர் பேசும் விதம் அனைவரையும் ஈர்க்கிறது.ரசிகர்கள் அவரது டிக் டாக்கிற்கு பல நல்ல கமெண்ட்ஸ் தருகின்றனர் . டயலாக்கை பேசி விட்டு அவர் சிரிப்பதை பார்த்தால் அப்பா இது உலக மகா நடிப்புடா சாமி என்றே சொல்ல தோன்றுகிறது.சகுனியா இது என்று பல தமிழ் ரசிகர்களும் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X