நான் நிறைய ஹீரோயின்சை கையில் பிடிச்சிருக்கேன்.. ஹீரோயின் கெட்டப்பில் புகழ்.. மயங்கிய பிரஷாந்த்!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 5வது சீசன் தற்போது மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் குக்குகள் சமைக்க, கோமாளிகள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட, அவர்களுடன் சேர்ந்து நடுவர்களும் நடைபோட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை களைகட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் பிரஷாந்தின் அந்தகன் படக்குழுவினரும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரயிறுதி கலக்கல் ஷோவாக ஒளிபரப்பாகிவரும் இந்த ஷோவின் பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக கடந்த 4 ஆண்டுகளை கடந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான போட்டியாளர்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் இந்த ஷோ வெற்றி பெற காரணங்களாக இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த ஷோவின் 5வது சீசன் பல்வேறு மாற்றங்களுடன் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த 5வது சீசனிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்துள்ளார்.
மாற்றங்களுடன் குக் வித் கோமாளி: செஃப் தாமு தொடர்ந்து நடுவராக தொடர்ந்துவரும் நிலையில் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கடந்த சீசன்களில் கவர்ந்துவந்த மணிமேகலை இந்த ஷோவின் ஆங்கராக தர்ஷனுடன் இணைந்துள்ளார். இந்த ஷோவின் வெற்றியே சிறப்பான பல டிஷ்கள் மற்றும் கோமாளிகளின் கோமாளித்தனங்கள்தான். அந்தவகையில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் இந்த ஷோவின் அட்ராக்ஷன்களில் ஒன்றாக நிகழ்ச்சியின் நடுவர்களும் காணப்படுகின்றனர். அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை கலர்ஃபுல்லாக மாற்றி வருகின்றனர்.
நிகழ்ச்சியில் பிரஷாந்த்: அந்தவகையில் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் அந்தகன் படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நடிகர் பிரஷாந்த், பிரியா ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கோமாளிகள், குக்குகளுடன் தொடர்ந்து தங்களது உற்சாகத்தை பகிர்ந்துக் கொண்டனர். இன்றும் நாளையும் ஒளிபரப்பாகவுள்ள இந்த ஷோவின் பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் புடவை அணிந்துக் கொண்டு புகழ் கோமாளியாக நடைபோட்டு வருகிறார். அவரது புடவைக்கட்டு மற்றும் நளினம் பார்வையாளர்களை வெகுவாக உற்சாகப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது.
பெண் கெட்டப்பில் புகழ்: ஜோயா போன்ற கெட்டப்புடன் இந்த ஷோவில் புகழ் வந்த நிலையில், அவரது வாய்ஸ் மட்டும் தனக்கு வரவில்லை என்று புகழ் குறைப்பட்டுக் கொள்கிறார். தொடர்ந்து பிரஷாந்திடம் சரோஜாதேவி வாய்சில் தன்னை தெரிகிறதா என்று அவர் கேட்பதாகவும், சிவாஜிகணேஷன் படத்தில் என்று பிரஷாந்த் துவங்குவதாகவும் அடுத்தடுத்து பிரமோவில் காணப்பட்டது. தன்னை சரோஜாதேவியாக ஆக்கிவிட்டதாக புகழ் கூறுகிறார். தொடர்ந்து புகழை கையில் பிரஷாந்த் தாங்கிப் பிடிப்பதாகவும் காணப்பட்டது. இதனிடையே தான் நிறைய ஹீரோயின்சை கையில் தாங்கி பிடித்துள்ளதாக பிரஷாந்த் கூறுகிறார். இடையில் பேசும் புகழ், தன்னை பிடிக்கும்போது வேறு மாதிரியாக இருந்திருக்குமே என்று கூறுவதாகவும் காணப்பட்டது. மொத்தத்தில் இந்த வார ஷோவில் கோமாளிகளுடன் இணைந்து பிரஷாந்தும் கலாட்டாவில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











