தங்கத்தால் செய்யப்பட்ட ரோபோ சங்கர் மகள் திருமண புடவை! விலை இவ்வளவா? இத்தனை விஷயம் இருக்கா?

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கருக்கு அவருடைய மாமா கார்த்திக் உடன் சமீபத்தில் திருமணம் முடிவடைந்தது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் ரோபோ சங்கர் மகள் திருமணத்தில் அணிந்து இருந்த புடவை குறித்து சில தகவல்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதில் ரோபோ சங்கரின் மகளின் புடவை தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அது இரண்டு கிராம் தங்கத்தை பயன்படுத்தி அதில் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Actor Robo Shankar s daughter Indraja wedding saree price how mach

பொதுவாக சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, பிரபலங்களாக இருந்தாலும் சரி தங்களுடைய வீட்டில் ஃபங்ஷன்கள் தொடங்கி விட்டாலே ஆடை, ஆபரணங்கள் வாங்கி குவிக்க தொடங்கி விடுவோம். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். மேட்சிங் பிளவுஸில் தொடங்கி மேட்சிங் செருப்பு வரைக்கும் விதவிதமாக வாங்கி வைத்தாலும் அடுத்தவர்கள் போட்டிருப்பதை ஓரக் கண்ணால் பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது என்று சொல்பவர்கள் ஏராளம்.

என்னதான் நாம் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி வாங்கி வைத்திருந்தாலும் அடுத்தவர்கள் போட்டிருப்பதை பார்க்கும்போது ஒருவித ஏக்கமும், விருப்பமும் ஏற்படதான் செய்யும். இது மனித இயல்பு தான். அதேபோல இப்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் ரோபோ சங்கர் மகள் திருமண விஷயங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருவதை பார்த்ததும் அதில் அவர்கள் போட்டு இருக்கும் ஆடை ஆவணங்கள் புடவைகள் பற்றிய பேச்சும், அதைப் பற்றிய தேடல்களும் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் ரோபோ சங்கர் மகள் திருமண புடவை பற்றி பலர் தேடி இருக்கிறார்கள். பொதுவாக பிரபலங்கள் வீட்டு திருமணம் என்றாலே பல நிறுவனங்கள் அவர்களுக்கு கொலாப்ரேஷன் மற்றும் ப்ரோமோஷன் செய்வதற்காக புடவைகள் நகைகள் என்று விதவிதமாக குவித்து விடுவார்கள்.

Actor Robo Shankar s daughter Indraja wedding saree price how mach

அந்த மாதிரி பல பொருள்கள் கிடைத்தாலும் ஒரு பெண்ணிற்கு திருமண புடவைகள் அவருடைய கணவர் வீட்டில் இருந்து தான் வாங்கி வருவார்கள். அதுபடி ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் மற்றும் அவருடைய மாமன் கார்த்திக்கு அவர்களின் சொந்த ஊரான மதுரையில் வைத்து திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின்போது இந்திரஜா கட்டி இருந்த திருமண புடவை இரண்டு கிராம் தங்கத்தால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

அதில் பிளவுஸில் கிராண்டாக ஆரி ஒர்க் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவருடைய இன்ஷியலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த மாதிரி வேலைப்பாடு அமைந்த பிளவுஸ் செய்வதற்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு ஆகி இருக்கும் என்று கூறப்படுகிறது. அது போல இரண்டு கிராம் தங்கத்தால் புடவை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த புடவை ஒன்றரை லட்சம் தோராயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக திருமணத்தை செய்திருக்கும் ரோபோ சங்கர் அவருடைய மகளின் திருமண புடவை இரண்டு லட்சத்திற்கு உள்ளே தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திரஜா சங்கர் திருமணம் மற்றும் ரிசெப்ஷன், குலதெய்வ கோவில் வழிபாடு என எல்லா இடங்களிலும் புடவை தான் அதிகமாக கட்டி இருந்தார். ஒரு சில இடங்களில் மட்டும் தான் லெகங்கா போட்டிருந்தார். அதே நேரத்தில் இவருடைய திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தனியார் youtube இல் பகிர்ந்து இருக்கும் நிலையில் புடவை பற்றிய ரகசியத்தை பெரிதாக இன்னும் பேசவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X