Sanjiv: சன் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய சஞ்சீவ்.. இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் அவருடன் இணைந்து பல படங்களில் நண்பராகவே நடித்தவர். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து சீரியல்கள் பக்கம் தாவியவர், அடுத்தடுத்து முன்னணி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தனக்கான ஒரு ரசிகர்கள் வட்டத்தை பெற்றுள்ளார்.

சன் டிவியின் லட்சுமி தொடரில் நாயகனாக இணைந்திருந்த இவர், இந்த தொடரில் செல்வம் என்ற கேரக்டரில் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வந்தார். தன்னுடைய மனைவி மகாலட்சுமிக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடியில் அவருடன் துணையிருக்கும் இந்த கேரக்டர் குறிப்பாக பெண்களை அதிகமாக கவர்ந்திருந்தது.

sanjiv lakshmi serial aaryann

நடிகர் சஞ்சீவ்: நடிகர் விஜய்யின் நண்பரான நடிகர் சஞ்சீவ் அடுத்தடுத்து அவருடன்இணைந்து பல படங்களில் நண்பராகவே நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் முயற்சியில் படங்களில் நடிப்பதிலிருந்து விலகி சின்னத்திரை சீரியல்களில் தன்னை இணைத்துக் கொண்டு மாஸ் காட்டினார். மெட்டி ஒலி சீரியலில்தான் இவர் முதன்முதலில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த சீரியலில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்த சஞ்சீவ், அடுத்தடுத்த சீரியல்களில் நாயகனாக நடித்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். இவருக்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுக் கொடுத்த சீரியல் திருமதி செல்வம். இந்த சீரியலில் செல்வம் என்ற லீட் கேரக்டரில் ரசிகர்களை கொள்ளைக் கொண்டார்.

லட்சுமி சீரியலில் இருந்து விலகல்: இந்நிலையில் சன் டிவியின் லட்சுமி சீரியலில் அதே கேரக்டர் பெயரில் நடித்து வந்தார் சஞ்சீவ். இந்த சீரியலில் செல்வமாக, மகாலட்சுமியாக நடித்துவரும் ஸ்ருதிராஜின் கணவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த சீரியல் டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று சேனலின் முன்னணி சீரியலாக வலம்வந்தநிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மகாராசி சீரியலில் நடித்துவந்த நடிகர் ஆர்யன் செல்வமாக இணைந்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், மகாராசி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்திருந்த ஸ்ருதிகாவை திருமணம் செய்துள்ளார்.

காரணம் என்ன?: இதனிடையே ரசிகர்களின் ஆதரவுடன் சிறப்பாக சென்றுவரும் லட்சுமி சீரியலில் இருந்து சஞ்சீவ் ஏன் விலகினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கான சரியான காரணம் தெரியாத நிலையில், சீரியலில் தனக்கான முக்கியத்துவம் குறைந்ததாக நினைத்ததாலேயே சஞ்சீவ் லட்சுமி சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக சீரியல் நடிகர்களுடன் இணைந்து பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் சஞ்சீவ். இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sanjiv lakshmi serial aaryann

ரசிகர்கள் ஏமாற்றம்: லட்சுமி சீரியலில் மகாலட்சுமியாக நடித்து வரும் ஸ்ருதிராஜின் அடுத்தடுத்த பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளில் அவரது கணவராக துணை நிற்கும் கேரக்டரில் சஞ்சீவ் நடித்து வந்தார். தங்களுக்குள் வரும் எந்த பிரச்சினையையும் இந்த ஜோடி இணைந்து எதிர்கொண்டு வந்தது. தங்களை பிரிக்க நினைப்பவர்களுக்கும் சவால் விடும்படியான இந்த கேரக்டர்கள், குறிப்பாக செல்வம் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகர்களை கவர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரது கேரக்டரை ஆர்யன் எப்படி ரீபிளேஸ் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X