டேய் அண்ணன் தம்பிங்களா.. நான் ஆம்பள.. எனக்கு ஒரு மகன் இருக்கான்! ஃபேமிலியை வெளுத்துவாங்கிய சரவணன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன் தனது குடும்பத்தினராலேயே ஏமாற்றப்பட்ட சம்பவங்களை பகிர்ந்து கொண்டதோடு பணம் தான் முக்கியம் மக்களே என அட்வைஸும் செய்தார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களின் வாழ்க்கையில் சந்தித்த துயரங்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இப்படி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக பிரபலங்கள் பகிர்ந்து வரம் தகவல்கள் ஹவுஸ் மேட்ஸை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அழ வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்களின் பர்சனல்களை பகிர்ந்துகொண்டனர்.

குடும்பத்தினர் பட்ட கஷ்டம்
சேரன் தனது மூத்த மகள் பிறந்தது குறித்தும் அப்போது தனது சூழ்நிலை குறித்தும் இயக்குநர் ஸ்டைலிலேயே ரசித்து ரசிக்கக்கூடிய வகையில் பகிர்ந்துகொண்டார். அவரை தொடர்ந்து பேசிய தர்ஷன் தான் கடந்து வந்த பாதை, தனது தாய் தந்தை பட்ட கஷ்டம் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டார்.

கலங்க வைத்த தர்ஷன் மதுமிதா
தர்ஷனை தொடர்ந்து நகைச்சுவை நடிகையான மதுமிதா பேசினார். அப்போது தான் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே தனது தந்தை மரணமடைந்துவிட்டதாக கூறிய மதுமிதா, தந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி அழுதார். தர்ஷன் மற்றும் மதுமிதாவின் பேச்சும் கலங்க வைக்கும் வகையில் இருந்தது.

சரவணனின் முதல் மனைவி
இதைத்தொடர்ந்து பேசினார் நடிகர் சரவணன். பணம் இல்லாமல் பொம்பளை காசில் பல ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறினார். குடி உட்பட அனைத்திற்கும் தனது முதல் மனைவிதான் பணம் கொடுப்பார் என்றும் கூறி ஆதங்கப்பட்டார், கண்ணீரும் விட்டார் சரவணன்.

இரண்டாவது திருமணம்
தனது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் பெற்றோர் வற்புறுத்தி இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாகவும் அதற்கு தாலி, புடவை என அனைத்தையும் வாங்கிக்கொடுத்தது தனது முதல் மனைவிதான் என்றும், இரண்டாவது மனைவியால் பட்ட வேதனையையும் கூறி வருத்தப்பட்டார் சரவணன்.

குடும்பத்தாரால் ஏமாற்றம்
பணம் தான் வாழ்க்கை, பணம் எவ்வளவு முக்கியம் என்பதை தனது குடும்பத்தினர்தான் தனக்கு கற்றுக்கொடுத்ததாக கூறினார். சினிமாவில் சம்பாதித்ததையெல்லாம் விட்டதையும் குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டதையும் கூறி ரொம்பவே கஷ்டப்பட்டார் சரவணன்.

நான் ஆம்பள
மேலும் தனது அண்ணன் தம்பிகளே தன்னை எப்படி ஏமாற்றினர் என்பது குறித்தும் கூறி ஆதங்கப்பட்டார் சரவணன். தனக்கு குழந்தை இல்லாததால் தன்னை ஆம்பளையே இல்லை என்று தன் உடன் பிறந்தவர்களே கூறியதால் நொந்துபோன சரவணன் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று காலரை தூக்கி குடும்பத்தினருக்கு கூறினார்.

நான் ஒரு அனாதை
தன் மகனுக்காக தான் வாழ்கிறேன் என்றும் அவனுக்காக தான் சொத்து சேர்க்கப்போகிறேன் என்றும் ஏமாற்றப்பட்ட விரக்தியில் பேசினார் சரவணன். மேலும் தனக்கு அண்ணன் தம்பி, அம்மா அப்பா என்று எந்த சொந்தமும் இல்லை என்றும் தனது சொந்தம் இரண்டு மனைவிகளும் தனது மகனும்தான் என்று கூறினார் சரவணன். அவரது பேச்சின் மூலம் குடும்பத்தினரால் அவர் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது தெளிவானது.

பணத்தை சேர்த்து வையுங்கள்
மேலும் கொஞ்சம் சம்பாதித்தாலும் அதனை சேர்த்து வையுங்கள் என்னை போல் முட்டாள் தனமாக இருந்துவிடாதீர்கள் என்றும் மக்களுக்கு அட்வைஸ் செய்தார் சரவணன். பணம் தான் எல்லாம் குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து வையுங்கள் என்று பிக்பாஸ் பார்க்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


Click it and Unblock the Notifications











