சித்தப்புக்கு வாயில சனி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சரவணன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சரவணன் வந்த நாள் முதல் சேரனுக்கு பின்னால் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். போதா குறைக்கு சாண்டி, கவின் ஆகியோரையும் சேரனுக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளார்.
சேரன் என்ன பேசினாலும், ஆகாத மருமகளை மாமியார் ட்ரீட் செய்வது போல் மட்டம் தட்டி எதிர் கருத்து கூறிவந்தார். இத்தனை நாளாக சேரனுக்கு பின்னால் பேசி வந்த சரவணன், இன்று சேரனின் முகத்துக்கு முன்பாக அவரை தரக்குறைவாக பேசினார்.

இங்கீதம் தெரியாத சரவணன்
மேலும் என்ன சொல்ல வர்றீங்க என்று அடிப்பது போல் எழுந்து அவரை நோக்கி சென்றார் சரவணன். இதனை பார்த்த மக்கள் கடுப்பாகியுள்ளனர். ஒரு பொது நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கீதம் கூட சரவணனுக்கு தெரியவில்லை என்று அவரை கேவலமாக திட்டி வருகின்றனர்.

பஸ்ஸில் பெண்களை உரசி
ஏற்கனவே பெண்களை உரசுவதற்காகவும் இடிப்பதற்காகவுமே பஸ்ஸில் சென்றிருக்கிறேன் என்று கடந்த வாரம் கமலிடம் பெருமையாக கூறி வாங்கி கட்டிக்கொண்டார் சரவணன். கமலிடம் அவர் பேசிய இந்த பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

பெரும் சர்ச்சை
பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் சரவணனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் வறுத்தெடுக்கப்பட்டார் சரவணன். சரவணனின் அந்த பேருந்து பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தர் பல்டியடித்த சரவணன்
விஷயம் விவகாரமாவதை உணர்ந்த பிக்பாஸ், தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவு போட்டார். இதைத்தொடர்ந்து தான் சொல்ல வந்ததே வேறு, யாரும் என்னை போல் தவறு செய்யாதீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன் என அந்தர்பல்டி அடித்தார் சரவணன்.

சித்தப்புக்கு நாக்குல சனி
அந்த விவகாரமே இன்னும் ஆரவில்லை. அதற்குள் சேரனை தரக்குறைவாக பேசி, அவரை அடிக்கப்பாய்ந்து மேலும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் சரவணன். இதனை பார்த்த நெட்டிசன்கள், சரவணனை சித்தப்புக்கு நாக்குல சனி, சீக்கிரம் வெளியே அனுப்புங்கள் என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











