உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்க.. ஜிபி முத்துவால் கதறும் நடிகர் சதீஷ்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜிபி முத்து பங்கேற்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பீதியடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பணிகள் சூடுபிடித்துள்ளது. விஜய் டிவியில் அடுத்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்காளக தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ நேற்று வெளியானது. கல்யாண வீடு மற்றும் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை காட்சிப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரகசியம் காக்க அறிவுறுத்தல்

ரகசியம் காக்க அறிவுறுத்தல்

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களும் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் நிகழ்ச்சி தொடங்கும் வரை ரகசியமாக இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு அறிவுறுத்தியுள்ளதால் பிரபலங்கள் வெளிப்படுத்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜிபி முத்து அறிவிப்பு

ஜிபி முத்து அறிவிப்பு

இந்நிலையில் டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக முதலில் தகவல் வெளியானது. அதன்பிறகு இல்லை அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. நேற்று ஜிபி முத்தே தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

விஜய் டிவி ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர்

விஜய் டிவி ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர்

ஆனால் இதுவும் பொய் தான், தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை தங்களின் பங்கேற்பு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என விஜய் டிவி ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டுள்ளதால் பங்கேற்பவர்கள் யாரும் இப்படி வெளிப்படையாக கூற மாட்டார்கள் என்றும் தகவல் பரவி வருகிறது.

நடிகர் சதீஷ் கதறல்

நடிகர் சதீஷ் கதறல்

அதேநேரத்தில் ஜிபி முத்து பங்கேற்பதாக வெளியான தகவலை பார்த்த நெட்டிசன்கள் தயவு செய்து அவரை கொண்டு வராதீர்கள் என கெஞ்சாத குறையாக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகரான சதீஷும் கதறியுள்ளார்.

"செத்த பயலுவலா.. நார பயலுவலா"

ஜிபி முத்து பங்கேற்பதாக வெளியான தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகர் சதீஷ். மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, "உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்கப்பா... என்னடா டாஸ்க் கொடுத்துருக்கீங்க.. செத்த பயலுவலா.. நார பயலுவலா" என பதிவிட்டுள்ளார். ஜிபி முத்து தான் வெளியிடும் வீடியோக்களில் இதுபோன்றே பேசி வருவதால் அதனை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார் நடிகர் சதீஷ்.

ஆடையை தூக்கி காட்டுபவர்கள்

ஆடையை தூக்கி காட்டுபவர்கள்

ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதாக வெளியான தகவலை பார்த்த இந்த நெட்டிசன், ஜிபி முத்தெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அது கொடுமையின் உச்சக்கட்டம் என்றும், ஆடையை தூக்கி காட்டுபவர்கள் எல்லாம் பிக்பாஸிலா என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் வேண்டாம்யா கமல்ஹாசன் என நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமலுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரவுடி பேபி சூர்யாவுடன் மோதல்

ரவுடி பேபி சூர்யாவுடன் மோதல்

ஜிப் முத்து டிக் டாக் செயலி மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானார். மேலும் ஜிபி முத்து ரவுடி பேபி சூர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடனம் ஆடியும் ஃபாலோயர்ஸ்களை அள்ளினார். பிறகு ரவுடி பேபி சூர்யாவுடன் மோதல் ஏற்பட கன்னாபின்னாவென ஜிபி முத்தை திட்டி தீர்த்தார் ரவுடி பேபி சூர்யா. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஜிபி முத்துவுக்கே பெரும் ரசிகர் கூட்டம் கிடைத்தது.

சன்னி லியோன் நடிக்கும்

சன்னி லியோன் நடிக்கும்

இதனை தொடர்ந்து யூடியூடிப்பில் தனி சேனல் தொடங்கி அட்டகாசம் செய்கிறார் ஜிபி முத்து. ஜிபி முத்துவின் வீடியோக்கள் எல்லை மீறுவதால் அவரது யூட்யூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதனிடையே சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படத்திலும் கமிட்டாகியுள்ளார் ஜிபி முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X