பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி?.. அவரே வெளியிட்ட வீடியோ!
சென்னை : நடிகர் சதீஷ், சுசித்ரா, ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரின் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்கள் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த தொடரில் பழனிச்சாமி என்ற கேரக்டரில் நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார். இவர் தனித்து போராடிவரும் பாக்கியாவிற்கு ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
நடிகர்கள் சதீஷ், சுசித்ரா, ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தொடர் பாக்கியலட்சுமி. திருமணமான மகனை வைத்துக் கொண்டு, கோபிக்கு ஏற்படும் காதல், அதையொட்டிய விவாகரத்து, பிரச்சினைகள், சச்சரவுகள், இரண்டாவது திருமணம் என்ற வகையில் இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

கோபி இரண்டாவது திருமணம்
இரண்டாவது திருமணம் நடந்தால் தான் சொர்க்கலோகத்தையே கையில் பிடிக்கலாம் என்பது போன்ற கற்பனைகளுடன் ராதிகாவை திருமணம் செய்யும் கோபிக்கு ஏற்படும் சங்கடங்கள், அதனால் அவர் முதல் மனைவி பாக்கியாவிற்கு கொடுக்கும் குடைச்சல், அதிலிருந்து மீளவும் பணத்தேவைக்காகவும் பாடுபடும் பாக்கியா என தொடர் அடுத்தடுத்த கட்டங்களில் நகர்ந்து வருகிறது.

கோபி அதிர்ச்சி
கோபி மற்றும் பாக்கியாவிற்கு விவாகரத்து ஆன நிலையில், பாக்கியாவின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுகிறார் ராதிகா. இதனால் கோபிக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஊமை போல இருந்த தன்னுடைய முன்னாள் மனைவி தற்போது கார் ஓட்டுவது, கான்ட்ராக்ட் எடுப்பது போன்றவற்றை செய்வதை பார்த்து கோபி அதிர்ச்சியடைகிறார்.

பழனிச்சாமி கேரக்டர்
இதனிடையே தற்போது ரஞ்சித் தொடரில் புதிய இணைப்பாக பழனிச்சாமி என்ற கேரக்டரில் இணைந்துள்ளார். இந்தக் கேரக்டர் முதல் நாளிலேயே பாக்கியாவுடன் வண்டியில் மோதுவது, அடுத்தடுத்து ஆங்கில வகுப்பில் சப்போர்ட் செய்வது என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.

சதீஷ் புதிய வீடியோ
இந்நிலையில் வழக்கம் போல கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஞ்சித்திற்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடைய கேரக்டருக்கான முக்கியத்துவம் தொடரில் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு வேண்டும் என வீடியோ
மேலும் மூன்று ஆண்டுகளாக இந்த தொடரில் நடித்து வருவதாலும் தனக்கு வயதாவதால் தான் ஓய்வெடுக்க விரும்புவதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கோபி இல்லாத பாக்கியலட்சுமி தொடர் சுவாரஸ்யமாக இருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications