மீண்டும் பார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: நடிகர் சதீஷ், பாடகர் க்ரிஷ் கோபம்

By Siva

Recommended Video

பார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸ்: சதீஷ், க்ரிஷ் கோபம்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ரம்யா வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல சில திரையுலக பிரபலங்களுக்கும் கூட பிடிக்கவில்லை.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து யாரை வெளியேற்ற விரும்புகிறீர்கள் என்று பார்வையாளர்களை வாக்களிக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் பார்வையாளர்கள் யாரை வெளியே அனுப்ப நினைத்து வாக்களிக்கிறார்களோ அவரை காப்பாற்றிவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு யாரையாவது வெளியேற்றுகிறார்கள்.

கடந்த 2 வாரங்களாக இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.

ரம்யா

பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின்படி நேற்று ஐஸ்வர்யாவை தான் வெளியே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ரம்யாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். இதை பார்த்து பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிஸ் யூ

பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கும் நடிகர் சதீஷ் கூட ஐஸ்வர்யா தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். ரம்யா புறம் பேசல, நெகட்டிவாக எதுவும் பண்ணல... மிஸ் யூ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சதீஷ்.

க்ரிஷ்

நியாயமாக இருந்தால் சில நேரம் தோற்றுப் போவோம் என்று பாடகர் க்ரிஷ் ரம்யாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். பார்வையாளர்களும் க்ரிஷ் போன்று தான் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்

ரம்யாவுக்கு தற்போது அமோக ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பலர் வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து கூட ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X