Gopi Character :நான் ஒரு முட்டாள்.. பாக்கியலட்சுமி தொடரில் கோபி வெளியேற இதுதான் காரணமா?

சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரின் முக்கியமான கேரக்டரான கோபி கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் சதீஷ்.

இவரது நடிப்பால் அந்த கேரக்டர் மட்டுமில்லாமல் அந்த சீரியலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று முன்னணி சீரியலாக மாறியுள்ளது.

இந்நிலையில் அந்த சீரியலில் இருந்து தான் விலகவுள்ளதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Actor Sathish walkout from Vijay TVs Baakiyalakshmi serial for this reason?

சதீஷ் வெளியேற காரணம் : விஜய் டிவியின் முக்கியமான தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர்ந்து டிஆர்பியிலும் இந்தத் தொடர் முன்னணியில் உள்ளது. இந்தத் தொடரின் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முன்னணி கேரக்டர்களை சுற்றியே தொடரின் கதைக்களம் இருந்து வருகிறது. இந்தத் தொடரில் நெகட்டிவ் கேரக்டராக தன்னுடைய சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கோபி.

இந்த கோபி கேரக்டருக்கு சிறப்பான வடிவம் கொடுத்து சிறப்பாக்கி வருகிறார் நடிகர் சதீஷ். முன்னதாக பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி என்ற இந்த தொடர் இவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்துள்ளது. திருமணமாகி, திருமணமான 2 மகன்களின் தந்தையாகவும் வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தகப்பனாகவும் இருந்தபோதிலும், தன்னுடைய வயதுக்கு மீறிய காதலுக்காக, தன்னுடைய மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பெறுகிறார் கோபி.

Actor Sathish walkout from Vijay TVs Baakiyalakshmi serial for this reason?

தொடர்ந்து ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார். இந்தத் திருமணம் மற்றும் தன்னுடைய முதல் குடும்பம் இரண்டிற்கும் இடையில் சிக்கி தவிப்பதாக அவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கேரக்டரை சிறப்பாக உள்வாங்கி நடித்து வருகிறார் சதீஷ். ஒரு கட்டத்தில் தன்னுடைய பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், குடிப்பழக்கத்தின்பால் செல்லும் இவர், அதன் மூலம் தன்னுடைய பிரச்சினைகளை மேலும் அதிகமாக்கிக் கொள்கிறார்.

இவ்வாறு இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருந்துவரும் சதீஷ், தற்போது இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நெகட்டிவ் கேரக்டரில் நடித்துவந்தாலும் அவரது செயல்களுக்கும் ஒரு காரணம் இருப்பதாக சீரியலில் காட்டப்படுகிறது. தன்னுடைய கேரக்டர் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள சதீஷ், தற்போது அதிலிருந்து விலகவுள்ளது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

முன்னதாக இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக தெரிவித்த சதீஷ், அதை மறுத்த நிலையில், தற்போது அதை நேரடியாகவே அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்தத் தொடரில் இவருக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதே இவர் விலக காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் புறக்கணிக்கப்பட்டது கூட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இன்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தால், அது ஏமாற்றத்தில்தான் முடியும் என்று கூறியுள்ளார். நேற்றுவரை தான் அதிபுத்திசாலி, உலகத்தையே மாற்றும் திறன் படைத்தவன் என்று நினைத்ததாகவும் ஆனால் தான் ஒரு முட்டாள் என்பதை தற்போதுதான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உலகத்தை மாற்ற முடியாது என்றும் ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு எதையோ உணர்த்துவதுபோல உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X