பிக்பாஸ் டைட்டில் இவருக்குதான்னு என் மனசு சொல்லுது.. அவரு கொத்திக்கிட்டு போகப்போறாரு..நடிகர் கணிப்பு

Recommended Video

Bigg Boss 3 Tamil | Promo 1 | Day 85 |Ticket to finale task

சென்னை: பிக்பாஸ் டைட்டிலை யாரு வெல்லப் போகிறார்கள் என்பது குறித்து நடிகர் சிவகுமார் டிவிட்டியிருக்கிறார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமானவர் நடிகர் சிவகுமார். இவர் சிவாஜி தேவ் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிங்கக்குட்டி, இதுவும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சுஜா வருணியின் கணவர்

சுஜா வருணியின் கணவர்

இவர் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சுஜா வருணியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கவனத்தை ஈர்த்த டிவிட்

கவனத்தை ஈர்த்த டிவிட்

இந்நிலையில் சிவகுமார் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இன்று அவர் பதிவிட்டுள்ள டிவிட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் ஒரு கறுப்புக் குதிரை

அவர் ஒரு கறுப்புக் குதிரை

அதாவது பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டி செல்ல போவது யார் என்பது குறித்து தனது கணிப்பை கூறியிருக்கிறார் சிவகுமார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, முகென் ஒரு கறுப்புக்குதிரை என்றும் அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக்கொண்டு போகப்போகிறார் என்றும் என் இதயம் சொல்கிறது.

அதிகம் நேசிக்க வைக்கிறது

அவரது பிரஸன்ஸும் அழகும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது! அது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது .. நான் ஏற்கனவே மலேசியாவை விரும்புகிறேன். முகென் ராவ் மீதான காதல் என்னை மலேசியாவை அதிகம் நேசிக்க வைக்கிறது!! இவ்வாறு நடிகர் சிவகுமார் பதிவிட்டிருக்கிறார்.

தர்ஷனுக்கு முன்னால் ..

அவரது டிவிட்டை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் அப்படிதான் தோன்றுகிறது என தெரிவித்துள்ளனர். இன்றைய எபிசோடை பார்க்கும் போது எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. இது ஆமை கதை போல இருக்கப்போகிறது. அவர் தர்ஷனுக்கு முன்னால் ஓடப்போகிறார், என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

அபிராமி இல்லாத எஃபெக்ட்

சிவகுமாரின் டிவிட்டுக்கு பதில் கொடுத்துள்ள மற்றொரு ரசிகர், அபிராமி இல்லாத எஃபெக்ட் அண்ணா இது.. அவர் இப்போது ஒரு நட்சத்திரத்தை போல ஜொலிக்கிறார் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X