நேச்சர் பத்தி கருத்து சொன்ன ரோஜா சீரியல் நாயகன்.. ட்ரெக்கிங் பயணத்தில் ச்சும்மா!
சென்னை : சன் டிவியின் ரோஜா சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் சிபு சூர்யன். இந்தத் தொடரில் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
Recommended Video
ரோஜா தொடரில் அதிரடி காட்சிகளிலும் அழகான காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன.
தன்னுடைய மனைவி ரோஜாவுடன் இவர் நடித்த பல காட்சிகளில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

நடிகர் சிபு சூர்யன்
நடிகர் சிபு சூர்யன் சன் டிவியின் ரோஜா தொடரில் அர்ஜூன் என்ற கேரக்டரில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். இந்தத் தொடர் ரசிகர்களின் பேவரிட் லிஸ்ட்டில் சிம்மாசனம் போட்டு அமர்வதற்கு இந்த அர்ஜூன் -ரோஜா கேரக்டர்கள்தான் முக்கிய காரணம். இவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக இருக்கும்.

அர்ஜூன் -ரோஜா கெமிஸ்ட்ரி
ரசிகர்கள் இவர்களின் கெமிஸ்ட்ரிக்காகவே இந்தத் தொடரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தொடர்ந்து டிஆர்பியிலும் முதல் 10 இடங்களில் இடம்பெற்று வருகிறது ரோஜா. இந்தத் தொடர் தற்போது ஐந்து ஆண்டுகளை நெருங்கவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்தத் தொடர் சிறப்பான வரவேற்புடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

படங்களில் நடிக்கும் சிபு
இந்நிலையில் சிபு சூர்யன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவி வருகிறார். தொடர்ந்து சினிமாவிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். கன்னடப் படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார். தமிழிலும் ஓடிடி ரிலீஸ் படங்கள் போன்றவற்றில் இவர் நடித்து வருகிறார். இதையொட்டி ரோஜா தொடரிலிருந்து இவர் விலகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

நேச்சர் குறித்து சிபு கருத்து
ஆனால் இதுகுறித்தெல்லாம் வாய் திறக்காமல் தன்னுடைய வேலைகளில் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார் சிபு. இந்நிலையில் ட்ரெக்கிங் செய்ய தன்னுடைய பயணத்தை தொடர்ந்த சிபு, அழகான ஒரு இடத்தில் ஹால்ட் ஆகி இயற்கையை ரசித்ததோடு, அந்தப் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

எல்லா இடத்திலும் அழகு
மேலும் உண்மையிலேயே நீங்கள் இயற்கையை நேசித்தால், எல்லா இடத்திலும் அழகை பார்ப்பீர்கள் என்றும் கருத்து சொல்லியுள்ளார். இந்தப் புகைப்படத்தில் மிகவும் அழகாக காணப்படுகிறார் சிபு. மிகவும் ஸ்டைலாக காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முக்கியமான தொடர்
சன் டிவியின் முக்கியமான தொடராக உள்ளது ரோஜா. இந்தத் தொடரில் அர்ஜுன் கேரக்டரில் நடித்துவரும் சிபுவை, அர்ஜூன் சார் என்று ரோஜா கூப்பிடுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொடர்ந்து குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் இந்த தொடர் அழகாக வெளிப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











