twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யூடியூபர்கள் முதல் நாள் முதல்காட்சி ஃபேன்ஸ் ரிவ்யூவில் செய்யும் மோசடி..அம்பலப்படுத்திய சிபிராஜ்

    |

    சென்னை: விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தியேட்டர் சுவாரஸ்யங்களை அழகாக பதிவு செய்தனர் ஆதவன் குழுவினர்.

    Recommended Video

    Sibiraj & Arun Mozhi Manickam | Maayon படத்தில் Ilaiyaraajaவின் பங்களிப்பு |*Interview

    முதல் நாள் முதல் காட்சியில் இத்தனை சுவாரஸ்யங்கள் உள்ளதா? அட ஆமாம் இதெல்லாம் நடக்குது இல்லன்னு எண்ணும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பல சுவாரசிய சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

    தியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்களின் ரிவ்யூவை கேட்கும் காட்சியில் யூடியூபர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிபிராஜ் விளக்கியது "விழிப்புணர்வை" ஏற்படுத்தும்படி இருந்தது.

    இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா

    முதல் நாள் முதல்காட்சி ட்ரெண்ட்

    முதல் நாள் முதல்காட்சி ட்ரெண்ட்

    தமிழ் சினிமாவில் சமீப காலமாக உருவாகி வரும் ட்ரெண்டிங் முக்கிய நடிகர்கள் உச்ச நடிகர்களின் படம் வரும்போது ரசிகர்களுக்காக அதிகாலை தொடங்கி ஐந்து ஷோக்கள் ஸ்பெஷல் ஷோக்களாக காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. இதற்காக ரசிகர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து அதிகாலை 4 மணி முதல் காட்சியை பார்த்து அதைப் பற்றி மற்றவர்களிடம் சந்தோஷமாக பேசி விடுவது வழக்கமாக இருக்கிறது.

    ஃபேன்ஸ் ரிவ்யூ

    ஃபேன்ஸ் ரிவ்யூ

    இதில் இன்னொரு முக்கியமான விஷயம் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை குறிவைத்து யூடியூபர்கள், வெப்சைட்டுகளில் ரசிகர்கள் விமர்சனம் என்று தனியாக போடுகிறார்கள் படத்தை பார்த்துவிட்டு முதல் காட்சி பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் பெரும்பாலும் முதல் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் தான். அவர்களிடம் என்ன வகையான விமர்சனம் வரும் என்பது தனிக்கதை.

    வேற லெவல், சூப்பர் ப்ரோ..

    வேற லெவல், சூப்பர் ப்ரோ..

    பெரும்பாலும் பாராட்டித்தான் பேசுவார்கள், இன்னொரு புறம் ரசிகர்களால் பார்க்க முடியாமல் போய் விமர்சனத்திற்கு உள்ளான பெரிய படங்களும் உண்டு. ஆனால் பெரும்பாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் "சூப்பர் ப்ரோ" "வேற லெவல் வேற லெவல்" "சான்சே இல்ல" "வேற யாரும் உலகத்திலேயே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது" "இனி ஒருத்தன் இப்படி ஒரு படம் எடுக்க பொறந்து தான் வரணும்" என்று பேசுவதைத்தான் பார்க்கிறோம்.

    டெக்னிக்கல் ரசிகர்கள்

    டெக்னிக்கல் ரசிகர்கள்

    இன்னொருபுறம் "ஒரு தடவை பார்க்கலாம் சார்" "பரவால்ல சார்" "அந்த காட்சி அருமை சார்" "பிஜிஎம் சூப்பர் சார்" "கேமரா ஆங்கில் அருமை சார்" என்று தங்கள் டெக்னிக்கலாக படத்தை ரசிப்பதை காட்டிக்கொள்ளும் ரசிகர்களையும் பார்க்கலாம். இதேபோல் திரைப்படம் பார்ப்பவர்கள் திரையரங்குகளில் செய்யும் சேஷ்டைகளை சுவாரஸ்யமான நிகழ்வுகளை வைத்து ஒரு கான்செப்டை விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இன்று ஆதவன் குழுவினர் என்று செய்து காட்டினார்.

    உண்மையான ரசிகனின் நிலை

    உண்மையான ரசிகனின் நிலை

    அவர்கள் நடத்திய ஒவ்வொரு காட்சியும் அனைவரையும் சிரிக்க வைத்தது. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க போகும் ரசிகர்கள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மாலை போடுவது, அதிகாலை காட்சிக்கு யார் போது என்பதை தீர்மானித்து வெளியே நின்று கொண்டு போகாமல் இருப்பதும், பின்னர் இவ்வளவு களேபரம் செய்து தனது தலைவன் படத்தை முதல்நாள் பார்க்க வேண்டுமென்று செல்லும் ரசிகன் உள்ளே அமர்ந்து படத்தை பார்க்கும் போது என்ன செய்கிறார் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.

    அதன் பின்னர் நடப்பதுதான் காமெடி

    அதன் பின்னர் நடப்பதுதான் காமெடி

    தியேட்டரில் குதித்து ஆட்டம் போட்டு விளம்பரம் போடும்வரை அனைத்து ஆட்டத்தையும் போட்டுவிட்டு படம் ஆரம்பித்தவுடன் இரவு முழுதும் கண் விழித்த களைப்பில் தூங்குவதும், இடையே கண் விழிக்கும்போது எழுந்து வா தலைவா, தலைவா என்று கத்தி விட்டு மீண்டும் தூங்குவதை நடித்தவர் அழகாக காட்சிப்படுத்தினார். பின்னர் அதே ரசிகர் வெளியே வந்து "படம் சூப்பர், வேற லெவல் யாராலும் எடுக்க முடியாது" என்று சொல்லி விட்டு செல்வதையும் கிண்டலாக வைத்திருந்தனர்.

    அட ஆமால்லன்னு சொல்லத்தோன்றும் நடிப்பு

    அட ஆமால்லன்னு சொல்லத்தோன்றும் நடிப்பு

    அதேபோல முதல் நாள் முதல் காட்சி முடிந்துவரும் ரசிகர்கள் ஒவ்வொரு வகையில் இருப்பதை சுவாரசியமாக நகைச்சுவையாக பதிவு செய்துள்ளனர், அதை பார்க்கும்போது அட ஆமால்ல என சொல்லத்தோன்றுகிறது. படத்திற்கு வந்தால் குடும்பத்தலைவர் முக்கியமாக பயப்படும் விஷயம் என்றால் இண்டர்வெல்லில் ஸ்நாக்ஸ் வாங்குவது. அதை அழகாக நடித்து காட்டினர்.

    ஸ்நாக்ஸ் வாங்கும் பரிதாப குடும்பத்தலைவன்

    ஸ்நாக்ஸ் வாங்கும் பரிதாப குடும்பத்தலைவன்

    ஸ்நாக்ஸ் கொடுப்பவர் நாம் சொல்வதை சரியாக காதில் வாங்காமல் அவராகவே பதிவு செய்வதில் தொடங்கி மொத்த ஸ்நாக்சையும் வாங்கிவிட்டு பணம் பற்றி கேட்டபோது அது சினிமா டிக்கெட் விலையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக இருப்பதை பார்த்து பயந்து அலறி குடும்பத் தலைவன் நொந்தபடி ஸ்நாக்ஸ் எடுத்துச் செல்வதையும் அது கூட்டத்தில் தட்டிவிடப்பட்டு மீண்டும் ஸ்நாகஸ் வாங்கிவிட்டு திரும்ப மனைவி வந்து படமே முடிந்துவிட்டதுன்னு அழைத்துச் செல்வது நல்ல காமெடி.

    ஹாரர் ஃபிலிம் ரசிகர்கள்

    ஹாரர் ஃபிலிம் ரசிகர்கள்

    இதேபோல் ஹாரர் ஃபிலிமை ரசிக்கும் ரசிகர்கள் படத்தை பார்க்கும் விதத்தையும் பயத்தை மறைத்து படம் பார்க்கும் ரசிகர் மற்றவர்களை எப்படி பயமுறுத்துகிறார் என்பதையும், 3-டி படத்தை முதன்முதலாக பார்ப்பவர்கள் எப்படி தியேட்டரில் ரியாக்ட் செய்வார்கள் என்பதையும் நகைச்சுவையுடன் நடித்துக் காட்டினர்.

    சிபி சத்யராஜின் குற்றச்சாட்டு

    யதாரத்தமாக நாம் தினமும் பார்க்கும் சினிமா தியேட்டர் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தி நடித்ததை நிகழ்ச்சியைக்காண வந்த சிபிராஜ் பாராட்டி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சுட்டிக்காட்டினார். முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் என வெகுநாட்களுக்கு முன்னர் எடுத்த காட்சிகளை வெட்டி ஒட்டி போடுகிறார்கள் என தனது குற்றச்சாட்டை வைத்தார். இந்நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் எப்போதும் பார்க்கலாம்.

    English summary
    Kalakka povathu yaru, the Adavam team who jokingly exposed fans atrocity in the FDFS show
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X