சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நாயகனாக இணைந்த சூரி.. யார் டைரக்டர் தெரியுமா?
மதுரை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் விடுதலை. படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி, மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார். படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. படத்தை கூழாங்கல் பட இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி வருகிறார்.

நடிகர் சூரி
நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விடுதலை படம், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டப்பிங்கில் விஜய் சேதுபதி
படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் படத்தின் டப்பிங்கில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னதாக இதற்கான பூஜை நடைபெற்றதாகவும் அவர் அப்டேட் தெரிவித்திருந்தார். மேலும் சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த படத்தின் டப்பிங்கும் முடிவடையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், தனுஷ் பாடி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

சூப்பர் வியாபாரம்
படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது. முன்னதாக படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் மார்ச் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி
இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் சூரி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். இந்தப் படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில், மதுரையில் 18 நாட்கள் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
காமெடியனாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் நடிகர் சூரி, விடுதலை படத்தின்மூலம் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிவரும் நிலையில், படத்தில் சூரியின் நடிப்பை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











