சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து! நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ..கதாநாயகி புடவையே கிழிஞ்சு போச்சு!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வானத்தைப்போல" சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் "ஸ்ரீகுமார்" வானத்தைப்போல சீரியலில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் சின்ராசு மற்றும் பொன்னி இருவரும் பைக்கில் போகும்போது ஏற்பட்ட விபத்து சூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது.

அப்போது பொன்னியின் புடவை நிஜத்திலும் கிழிந்து இருக்கிறது. அதே நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் பற்றியும் அந்த வீடியோவில் ஸ்ரீ குறிப்பிட்டு இருக்கிறார்.

Actor Sreekumar share vanathai pola serial shooting spot video

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகன் உட்பட பலர் மாறி இருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்களுக்கு இந்த சீரியல் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் இப்போது இந்த சீரியலில் சின்ராசு கேரக்டரில் நடிகர் ஸ்ரீ நடித்து வருகிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலின் சூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த வீடியோ ஒன்றையும் ஸ்ரீ பகிர்ந்து இருந்தார். அப்போது ஸ்ரீயின் உடலில் தீப்பிடித்து விட்டது.

அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஸ்ரீக்கு அட்வைஸ் கொடுத்து கொண்டிருந்தனர். அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளை தன்னுடைய வீடியோவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு துளசியை சின்ராசு கண்டுபிடிக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் நடிகர் ஸ்ரீ பகிர்ந்திருந்தார்.

Actor Sreekumar share vanathai pola serial shooting spot video

இப்போது அதுபோல பொன்னியும் சின்ராசுவும் பைக்கில் போகும்போது கூட பொன்னியின் புடவை பைக்கில் மாட்டி விபத்து ஏற்படுவது போன்ற காட்சிகள் படமாக்கி இருக்கின்றனர். அப்போது பொன்னியின் புடவை நிஜத்திலேயே கிழிந்து போயிருக்கிறது. அதே நேரத்தில் அங்கு வைத்திருந்த பெட்டில் பொன்னி மற்றும் சின்ராசு விழாமல் தரையில் கீழே விழுந்து இருக்கின்றனர். இதனால் இவர்களுடைய உடம்பிலும் அடிபட்டு இருக்கிறது.

ஆனாலும் இவர்கள் ஜாலியாக அந்த வீடியோவில் பேசிக் கொண்டிருந்தனர் இதை ஸ்ரீ பகிர்ந்திருக்கும் நிலையில் ஒரு காட்சிகள் படமாக்கப்பட்டு அதை ரசிகர்களை கவர வைக்க அதற்காக என்னவெல்லாம் வேலை பார்க்க வேண்டியது இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Actor Sreekumar share vanathai pola serial shooting spot video

சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி கார் ஆக்ஸிடெண்ட் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படும்போது எடுத்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதுவும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் இனி பொன்னி மற்றும் சின்ராசுக்கு இடையே இப்படித்தான் காட்சிகள் வரப்போகிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே சீரியலில் இவர்கள் இருவரும் இன்னும் சேர்ந்து வாழாமல் இருக்கும் நிலையில் இந்த விபத்துக்கு பிறகு பொன்னி சின்ராஸோடு சேர்ந்து வாழ்வாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X