Actor Suriya: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திடீரென சென்ற சூர்யா.. ஆடிப்போன ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல சீசன்களை கண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியில் முதலில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 18வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இதே போல தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த நிகழ்ச்சி 8வது சீசனில் உள்ளது.
முன்னணி ஹீரோக்கள் மட்டுமில்லாமல் பலரும் தங்களது படங்களின் ப்ரோமோஷன்களை மேற்கொள்ள இத்தகைய ரியாலிட்டி ஷோக்களுக்கு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வார தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றதை பார்க்க முடிகிறது. இதேபோல தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கு பெற்றுள்ளார். இதற்கான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த ஆர்வத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி: பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் நடத்தப்பட்டு பல சீசன்களை கண்டு வருகிறது. தமிழில் புதிய ஹோஸ்ட்டாக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 8வது சீசன் நடந்து வருகிறது. இதில் இதுவரை இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் அடுத்தடுத்து எந்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்படுகிறது. தமிழில் ரசிகர்களை கவர்ந்துள்ளது போலவே இந்த நிகழ்ச்சி ஹிந்தியிலும் சல்மான் கான் ஹோஸ்ட்டிங்கில் கடந்த 18 ஆண்டுகளாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
கங்குவா படம்: இதே போல தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா ஹோஸ்ட் செய்து வருகிறார். அவரது ஹோஸ்டிங்கில் தற்போது தமிழைப் போலவே எட்டாவது சீசனில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வார இறுதியில் நடிகர் சூர்யா பங்கேற்றதை பார்க்க முடிந்தது. நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே இந்த படத்திற்கான அடுத்தடுத்த ப்ரோமோஷன்களை சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்களும் இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரும் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் சூர்யா: இந்நிலையில் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் படத்தின் பிரமோஷனுக்காக சென்றுள்ள நடிகர் சூர்யா, ரசிகர்களை நேரில் சந்தித்து தன்னுடைய உற்சாகத்தையும் படம் குறித்த பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இந்த வாரயிறுதிக்கான பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலும் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றதை பார்க்க முடிந்தது. இதையொட்டி சூர்யா மற்றும் நாகார்ஜுனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
கங்குவா பட பிரமோஷன்கள்: கங்குவா படம் மிகப்பெரிய பொருட்செலவுடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் சூர்யா இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக அடுத்தடுத்து மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதனிடையே கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தின் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார் சூர்யா. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











