மணக்கோலத்தில் எஸ்.வி.சேகர்.. தலைக்கு வந்த கத்தி.. ஆத்தி என்ன நடக்க போகுதோ?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் எஸ்.வி.சேகர் சமீபத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்வது போன்ற புரோமோ வீடியாவால் பரபரப்பை கிளப்பினார். பின்னர், அது சீரியலுக்காக எடுக்கப்பட்டா காட்சி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், நடிகைக்கு 30 வயது என்றும் தனக்கு 58 வயது உள்ள நபராக நடிப்பதாகவும் தெரிவித்தார் எஸ்.வி.சேகர். இந்நிலையில், தற்போது வெளியான புதிய புரோமோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் வித்தியாசமான படைப்பாக மீனாட்சி சுந்தரம் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. மீனாட்சி சுந்தரம் சீரியலில் எஸ்.வி.சேகர் - ஷோபனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வயதான நடிகரை திருமணம் செய்வது போன்ற காட்சியில் நடிக்க பலரும் தயங்குவார்கள். மீனாட்சி சுந்தரம் சீரியல் புரோமோ வீடியோ சர்ச்சையான நிலையில் யார் இந்த நடிகை என தேட தொடங்கிவிட்டார்கள். நெட்டிசன்கள் பலரும் வலைபோட்டு தேடினர்.

முத்தழகு ஷோபனா: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன முத்தழகு சீரியலில் நடித்தவர் தான் இந்த ஷோபனா. இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார். முத்தழகு என்ற தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வர இப்போது ஷோபனா தனது அடுத்தடுத்த சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சுந்தரம் சீரியலில் லீட் ரோலில் நடிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடரான பூங்காற்று திரும்புதமா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் எஸ்.வி.சேகரின் தீவிர ரசிகை என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது கையில் அரிவாளுடன் எஸ்.வி.சேகரை மிரட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மீனாட்சி சுந்தரம் கதை: வரும் 28ஆம் தேதி முதல் கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. மீனாட்சி சுந்தரம் சீரியலில் சுந்தரத்தின் முதல் மனைவி காலமானதால் அவரது ஒரே மகளான கஸ்தூரி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு, அருள் என்ற மகன்களும் இருக்கிறார்கள். ஆனால், சொத்தில் பங்கு போடும் மருமகள் கொடுமையால் மகள் வீட்டில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சூழலில் நாயகி மீனாட்சி சுந்தரத்தை தேடி திரிவது போல் கதை நகர்கிறது. ஒரு வழியாக மீனாட்சி சுந்தரத்தை கண்டுபிடித்து விடுகிறார். ஆனால், அடுத்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைகிறது. இக்கட்டான சூழலில் சுந்தரம் மீனாட்சியை திருமணம் செய்கிறார். ஊரெல்லாம் இளம்பெண்ணை காதலித்து விட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது. ஒரு பக்கம் இரண்டு மகன்கள், மறுபக்கம் ஊர் மக்கள் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதே மீதி கதையாக இருக்கிறது. இந்த திருமணம் எதனால் நடக்கிறது என்பதை காரணமாக வைத்து விறுவிறுப்புடன் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

மணக்கோலத்தில் எஸ்.வி.சேகர்: அண்மையில் 2 புரோமோ வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு முன்பு 30 வயது பெண்ணை கரெக்ட் பண்ணி கல்யாணம் செய்துவிட்டதாக இளைஞர்கள் வயித்தெறிச்சல் படுகின்றனர். தற்போது வெளியான மீனாட்சி சுந்தரம் புரோமோவில் பேரன் பேத்திகளை வாழ்த்தலாம் என எஸ்.வி.சேகர் கூறும்போது நாயகி ஷோபனா கையில் அரிவாளை எடுக்கிறார். அதனுடன் புரோமோ முடிகிறது. எதற்காக நாயகி அரிவாள் எடுக்கிறாள். குடும்பத்திடம் இருந்து சுந்தரத்தை தனிமைப்படுத்த போகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. மேலும், எஸ்வி.சேகர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications