Vela Ramamoorthy: எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேல ராமமூர்த்தி போட்ட கண்டீஷன்.. அட இதுதான் விஷயமா?

சென்னை: சன் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று சேனலின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. தன் வீட்டு பெண்களை எப்படியெல்லாம் ஆதி குணசேகரன் கேரக்டர் அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறார் என்பதை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கேரக்டரில் முன்னதாக நடிகர் மாரிமுத்து நடித்துவந்தார். இவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இது நடிப்பு என்பதை மறந்து இவரை அனைவரும் திட்டித் தீர்த்தார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமான சூழலில், அவரது கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. மாரிமுத்துவை தவிர அந்தக் கேரக்டரில் யாரையும் பொருத்திப்பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் இந்த கேரக்டரில் பிரபல வில்லன் நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி இணைந்து நடித்து வருகிறார். இவர் தற்போது இந்தக் கேரக்டரில் சிறப்பாக பொருந்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவரது கேரக்டரில் அதிகப்படியான வில்லத்தனம் ஏற்றப்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

Actor Vela ramamoorthy about Ethirneechal serial and late actor Marimuthu

எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய வீட்டுப் பெண்களை அடக்கியாளும் ஆதி குணசேகரன் கேரக்டர் இந்த சீரியலில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. இந்த சீரியலில் முன்னதாக இந்த கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் பெண்களின் திட்டுகளை வாங்கியதே இந்த கேரக்டரின் வெற்றியாக பார்க்கப்பட்டது.

நடிகர் மாரிமுத்து மறைவு: கடந்த ஆண்டில் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து உயிரிழந்த நிலையில், இந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்த கேரக்டரில் மற்ற நடிகர்களை பொருத்திப் பார்க்க விரும்பவில்லை என்றும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் பிரபல வில்லன் நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் இணைந்து தற்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சினிமாவில் மதயானை கூட்டம் படம் மூலம் மிகுந்த கவனத்தை பெற்ற இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் அதிரடி காட்டி வருகிறார்.

கண்டீஷன் போட்ட வேல ராமமூர்த்தி: இந்நிலையில் வேல ராமமூர்த்தி தனது சமீபத்திய பேட்டியில் இந்த சீரியல் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். தான் இணைந்தவுடன்தான் தனது கேரக்டரில் ஓவர் வில்லத்தனம் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் தான் தன்னுடைய ஸ்டைலில்தான் நடிப்பேன் என்று முன்னதாக கண்டீஷன் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சீரியலில் நடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்து குறித்தும் அவர் பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார். தான் மாரிமுத்துவுடன் இணைந்து 8 படங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாரிமுத்து இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும்: கொம்பன் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், தங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாகவும் இறுதியாக வீராயி மக்கள் என்ற படத்தில் இருவரும் அண்ணன் -தம்பியாக நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அது குறைவான பட்ஜெட்டில் உருவான படம் என்பதால் ஒரே ஓட்டலில் தங்கி, ஒரே காரில் இருவரும் பயணம் செய்ததை தற்போது நினைவு கூர்ந்துள்ளார். தான் காரைக்குடியில் சூட்டிங்கில் ஈடுபட்ட போதுதான் மாரிமுத்து மறைவு குறித்து தனக்கு தெரியவந்ததாகவும் அதை கேட்டபின்பு, தன்னால் இயல்பாக சூட்டிங்கில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னைவிட மாரிமுத்து 17 வயது சிறியவர் என்றும் அவர் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X