Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த குணசேகரன்.. வெளியான சூப்பர் அப்டேட்!

சென்னை: சன் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த வாரங்களில் மாஸ் காட்டி வரும் தொடர் எதிர்நீச்சல்.

முன்னதாகவே இந்தத் தொடரின் ஆதி குணசேகரன் கேரக்டர்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார் நடிகர் மாரிமுத்து.

Actor Vela Ramamoorthy going to join Etirneechal serial soon

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், சீரியலில் அடுத்த குணசேகரன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமான அளவில் காணப்படுகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் விரைவில் களமிறங்கும் நடிகர் வேல ராமமூர்த்தி: சன் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி முக்கியமான கேரக்டரில் நடித்தும் வருகிறார். முன்னதாக சன் டிவியில் இவரது சீரியல்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் இருந்த நிலையில், தற்போது எதிர்நீச்சல் தொடரும் ரசிகர்களை கவர தவறவில்லை. குறிப்பாக இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கேரக்டராக உள்ளது.

Actor Vela Ramamoorthy going to join Etirneechal serial soon

நெகட்டிவ் ஷேட் இருந்த போதிலும் இந்த கேரக்டருக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் மறைந்த நடிகர் மாரிமுத்து. இந்தாம்மா ஏய் என்ற இவரது டயலாக் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இந்த கேரக்டருக்காக தன்னுடைய உடல்மொழியால் சிறப்பு சேர்த்திருந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மறைந்த நிலையில், சீரியல் தரப்பினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அதிகமான அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

நடிப்பு, இயக்கம், தொலைக்காட்சி தொடர் என பன்முகம் காட்டிவந்த மாரிமுத்து, உயிரிழந்தது, இந்தத் தொடருக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்த கேரக்டர் அவரை பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களிடையே சேர்த்த நிலையில், அவருக்கு மாற்றாக சீரியலில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்படுகிறது. சில ட்விஸ்ட்களுடன் இந்த கேரக்டரை சீரியலில் சேர்க்க இயக்குநர் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கேற்க காட்சிகள் காணப்படுகின்றன.

முன்னதாக இந்த கேரக்டரில் மாரிமுத்துவிற்கு பதிலாக பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த கேரக்டரில் ராதாரவி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வேல ராமமூர்த்தி போட்ட கண்டிஷன்களுக்கு சீரியல் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதால் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Vela Ramamoorthy going to join Etirneechal serial soon

ஆதி குணசேகரன் கேரக்டரில் அலட்சியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாரிமுத்து. பெண்களைக கட்டுப்படுத்தி ஆள நினைக்கும் இந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. இந்நிலையில் வேல ராமமூர்த்திக்கும் அதே போன்றதொரு உடல்மொழி காணப்படுவதை அவரது படங்களில் பார்க்க முடிகிறது. இதனால் அவர் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு சிறப்பாக பொருந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X