Vijay Antony: இச்சு கொடு பாடல்.. பிரியங்காவிற்காக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட விஜய் ஆண்டனி.. அட!

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருபவர் விஜய் ஆண்டனி. விஜய், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ள விஜய் ஆண்டனி தற்போது நடிகராக தன்னுடைய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார்.

மேலும் பிச்சைக்காரன் 2 படத்தையும் இயக்கி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் அடுத்ததாக விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் விஜய் ஆண்டனி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Televisiion Vijay Antony Vijay tv Priyanka

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என கோலிவுட்டில் பன்முகத்திறமையுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து வெளியான ரத்தம், கொலை படங்கள் சிறப்பாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மேகா ஆகாஷ் இணைந்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் படம்: மழை பிடிக்காத மனிதன் படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதனிடையே விஜய் டிவியின் பிரபல காமெடி ஷோவான ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5 நிகழ்ச்சியிலும் தற்போது பங்கேற்றுள்ளார். அவருடன் மேகா ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர். இதன் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து விஜய் டிவியின் எக்ஸ் தள பக்கங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.

விஜய் டிவி ஷோவில் விஜய் ஆண்டனி: இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் ஆண்டனி தன்னுடைய பாடல் ஒன்றை ஆக்சன் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதில் விஷால் நடிப்பில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான வெடி படத்திலிருந்து இச்சு இச்சு இச்சு கொடு என்ற பாடலை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஜய் ஆண்டனி டீம் ஈடுபட்டிருந்தது. எதிரில் இருந்த விஜய் ஆண்டனி டீமை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவரை இந்த பாடலை கண்டுபிடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து முத்தம், கிஸ் என்பதாக பல வார்த்தைகளை கூறி இறுதியில் இச்சு இச்சு என்ற பாடலை கண்டுபிடித்தார் விஜய் ஆண்டனி.

வாய்ப்பை பயன்படுத்திய விஜய் ஆண்டனி: இதையடுத்து பக்கத்தில் இருந்த ஆங்கர் பிரியங்கா தன்னைப் பார்த்து தொடர்ந்து விஜய் ஆண்டனி இப்படி கூறுவதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனியும் காமெடியாக இந்த வாய்ப்பை தான் பிரியங்காவிற்காக பயன்படுத்திக் கொண்டதாக கூறியது ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மிக அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் பாடல், ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த படம் விஜய் ஆண்டனிக்கு மிகச் சிறப்பாக கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X