நீயா நானா ஷோவில் பங்கேற்ற சூடான் நாட்டை சேர்ந்த விஜய் ரசிகர்.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் நீயா நானா ஷோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த வாரமும் வித்தியாசமான தலைப்பில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவரும்வகையில் நடந்தது.

நீயா நானா ஷோ

நீயா நானா ஷோ

விஜய் டிவியில் ஆங்கர் கோபிநாத் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கராக இருந்து நடத்திவரும் விவாத நிகழ்ச்சி நீயா நானா. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி இரு சாராருடன் நடந்து வருகிறது. ஒரு விஷயத்தில் இருவேறு கருத்துக்களை கொண்டவர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

சுவாரஸ்யமான விவாதங்கள்

சுவாரஸ்யமான விவாதங்கள்

அந்த வகையில் இந்த வாரமும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்பில்தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டன.

சினிமா குறித்த விவாதம்

சினிமா குறித்த விவாதம்

சினிமா மட்டுமே சமூகத்தில் சமநிலையை மக்களிடம் கொண்டுவந்தது என்று நடுநிலையாக பேசப்பட்டது. கலையை ரசிக்காத சமூகம் வளர்வதற்கான சூழல் குறைவாகவே இருக்கும் என்றும் விவாதிக்கப்பட்டது. சமநிலையை விரும்பாதவர்கள் மட்டுமே சினிமாவையும் தள்ளி வைப்பார்கள் என்றும் பேசப்பட்டது.

சூடானை சேர்ந்த விஜய் ரசிகர்

சூடானை சேர்ந்த விஜய் ரசிகர்

இந்நிலையில் சூடானில் இருந்து வந்த ரசிகர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பேசினார். சினிமா எல்லோரும் ஒன்றுகூடும் ஒரு இடமாக உள்ளதாகவும் அதில் சந்தோஷமும் கொண்டாட்டமும் உள்ளதாகவும் அவர் கூறினார். தான் அதிகமான தமிழ்ப்படங்களை பார்த்துள்ளதாகவும் முதல்நாள் முதல் ஷோ பார்ப்பது பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

 செல்போன் பேக்கேஸில் விஜய்

செல்போன் பேக்கேஸில் விஜய்

தொடர்ந்து பேசிய அவர் தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். தன்னுடைய செல்போனின் பேக்கேஸில் அவர் விஜய் படத்தை வைத்துள்ளதையும் நிகழ்ச்சியில் அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விஜய்யின் சர்வதேச ரசிகர்கள்

விஜய்யின் சர்வதேச ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்ப இதுவும் ஒரு காரணம். சமீபத்தில் வெளியான அவரது பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அதிகமான வசூலை பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X