கலக்கும் விஜய் சேதுபதி.. கதிகலங்கிய போட்டியாளர்கள்.. பரபரக்கும் பிக்பாஸ் சீசன் 8 !!

சென்னை: தமிழக மக்களின் நெஞ்சம் வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிசோடு முதலே ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே அதிகமான எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விஜய் சேதுபதி, அதை சிறப்பாகவே பூர்த்திசெய்து வருகிறார்.

televisiion bigg boss tamil 8 vijay sethupathi 8

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் 8 ஷோ. இந்த நிகழ்ச்சி கடந்த வாரத்தில் துவங்கப்பட்டு மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முக்கியமாக நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த 7 சீசன்களில் ஹோஸ்ட்டாக கமல்ஹாசன் சிறப்பாக செயல்பட்ட நிலையில் , இந்த முறை, புதிய ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர் விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஹோஸ்ட் விஜய் சேதுபதி: வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது. வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை. வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் அசத்தலாகச் சொல்லும் அவரது திறமை பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

கவனமாக கையாண்ட விஜய் சேதுபதி: வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். போட்டியாளர்களை அன்பாக அணுகுவதும், அவர்களது தவறுகளைக் கடுமையாகக் கண்டிப்பதும் என அதிரடியில் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. வார முடிவில் எலிமினேஷன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாகக் கையாண்ட விஜய் சேதுபதி, மீதமுள்ள போட்டியாளர்களைப் பற்றிய தனது நேர்மையான கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பிக்னிக் வந்தீர்களா?: கடந்த வாரயிறுதி எபிசோட்களில் பங்கேற்ற விஜய் சேதுபதி, எடுத்த எடுப்பிலேயே 18 போட்டியாளர்களை பயமுறுத்திப் பார்த்தார். அவர்கள் கோப்பைக்காக சிறப்பாக செயல்படுவோம் என்று கூறிவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாகவும் ஆனால் தற்போது உப்பு, கொத்தமல்லிக்காக சண்டையிட்டு வருவதாகவும் பிக்னிக் வந்தது போல செயல்படுவதாகவும் கூறி போட்டியாளர்களிடம் போட்டி குறித்த பயத்தை ஏற்படுத்தினார். அது தற்போது அடுத்தடுத்த நாட்களில் பிக்பாஸ் வீட்டில் எதிரொலித்து வருகிறது. ஆரம்பம் முதலே பல புதுமைகளுடன், எதிர்பாரா திருப்பங்களுடன், கலக்கலாக நடந்து வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X