என் வாழ்க்கையில பேய் வந்து விளக்கேத்துச்சு.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலக்கல்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வரும் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆவதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஜய் சேதுபதி தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பங்கேற்றதை பார்க்க முடிந்தது. தன்னுடைய முதல் படமான பீட்சா படம் குறித்து இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மகிழ்ச்சியை விஜய் சேதுபதி பகிர்ந்து கொண்டதை நிகழ்ச்சியின் பிரமோவில் பார்க்க முடிந்தது. குக்குகளுடன் இணைந்து அவர் சமையலிலும் ஈடுபட்டுள்ளார்.

Television Vijay sethupathi Maharaja movie Vijay tv Cooku with comali

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. பாலிவுட்டில் கத்ரீனா கையிஃப்புடன் இணைந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் தமிழிலும் ரிலீசான நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படம் வெற்றி படமாகவும் அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஆறு மாதங்களை கடந்து விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மகாராஜா படம்: விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தை இயக்கியுள்ளார் குரங்கு பொம்மை படம் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன். இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி காணப்படுகிறார். முன்னதாக இந்தப் படத்தின் ரெயிலர் வெளியான நிலையில் அதில், லட்சுமியை காணோம் என அவர் அடுத்தடுத்து போலீஸ் ஸ்டேஷனில் மல்லு கட்டியதை பார்க்க முடிந்தது. கடைசி வரை அவர் குறிப்பிட்ட லட்சுமி யார் மற்றும் எது என வெளிப்படுத்தப்படாமலேயே இந்த ட்ரெய்லர் நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறுவதற்கு இந்த ட்ரெயிலரும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

பிரமோஷனில் விஜய் சேதுபதி: படம் இன்னும் இரு தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் விஜய் சேதுபதி ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய குடும்பம், சக நடிகர்கள் மற்றும் மகாராஜா படம் குறித்த அடுத்தடுத்து விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. இதற்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தான் முன்னதாக ஆங்கராக செயல்பட்டுள்ளதாகவும் ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கோமாளிகளுடன் வித்தியாசமாக காணப்படுவதாகவும் விஜய் சேதுபதி பாராட்டுவதாக இந்த ப்ரோமோவில் காணப்பட்டது.

விளக்கேற்றிய பேய்: மேலும் நிகழ்ச்சியில் பீட்சா குறித்த விஷயத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தன்னுடைய கேரியரில் பேய் தான் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் விஜய் சேதுபதி தன்னுடைய முதல் படமான பீட்சா குறித்து மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. மேலும் நிகழ்ச்சியில் குக்குகளுடன் இணைந்து அவர் சமையலில் பங்கேற்றதையும் கோமாளிகளுடன் இணைந்து உற்சாகமாக நிகழ்ச்சியில் வலம் வந்ததையும் இந்த பிரமோ மூலம் அறிய முடிந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிகழ்ச்சி. இந்நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் இணைந்துள்ளது நிகழ்ச்சியில் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X