Vijayakanth: விஜயகாந்துக்கு எதிராக இத்தனை சதியா? அதுவும் இவங்களுமா? பிரபல நடிகர் பகீர் பேட்டி

சென்னை: நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரீட்சையமான நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

அது அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பலரும் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

Actor Vijayakanth Birthday: Acter Mesai Rajender interview about actor Vijayakanth

இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான மீசை ராஜேந்தர் விஜயகாந்த்தின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்துக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. அவர் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகன். காதல், சண்டை, பாசம், குழந்தைத்தனம் என எல்லா கேரக்டரிலும் அல்டிமேட் ஆக தன்னுடைய நடிப்பை காட்டி பலருடைய மனதை கவர்ந்திருக்கிறார். அதோடு சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ போல தான் நடிகர் விஜயகாந்த் வாழ்ந்து வந்திருக்கிறார்.

எப்போதும் தன்னுடைய வீட்டிற்கு வருபவர்கள் முதலில் சாப்பிட வைத்து விட்டு தான் அவரிடம் என்னவென்று கேட்பாராம். வீட்டிற்கு வருபவர்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக நடிகர் விஜயகாந்த் வீட்டில் எப்போதும் சாப்பாடு தயாரிக்க பட்டு கொண்டிருக்கும் என்று பல நடிகர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களுக்கு நடிகர்கள் போட்டியாக பல நேரங்களில் சண்டை போடுவார்கள் ஆனால் நடிகர் விஜயகாந்த் பற்றி பல நடிகர்களும் பெருமையாக பேசுவார்கள். அவரால் தங்களுக்கு உதவி கிடைத்ததாக கூட பல நடிகர்கள் வெளிப்படையாகவே பேசி இருக்கின்றனர்.

நடிப்பு உதவியாக இருந்தாலும் சரி, தங்களுக்கு பண உதவியாக இருந்தாலும் சரி விஜயகாந்திடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் என்று பல நடிகர்கள் கூறியிருக்கின்றனர். அதன் அடிப்படையில் தான் அரசியல் பிரமுகராக மாறிய விஜயகாந்துக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவருடைய போதாத காலம் அவர் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் நலம் பெற்று வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் பல பிரபலங்களும் கூட வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூட அப்பாவின் உடல் நிலையில் பின்னடைவு தான். ஆனால் நன்றாக இருக்கிறார் என்று அவர் பேசியிருந்தார். இது பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் விஜயகாந்துடன் நெருங்கி பழகிய நண்பரும் நடிகருமான மீசை ராஜேந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்று நடிகர் விஜயகாந்த் பற்றி பேசியிருக்கிறார்.

Actor Vijayakanth Birthday: Acter Mesai Rajender interview about actor Vijayakanth

அதில் சட்டசபையில் ஜெயலலிதா பார்த்த ஒரே ஆண்மகன் என்றால் அது விஜயகாந்த்தாக மட்டும் தான் இருக்க முடியும். ஜெயலலிதா முன்பு நாக்கை துருத்தி விஜயகாந்த் பேசியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனிமேல் உங்களுக்கு இறங்குமுகம் தான் என அப்போதே சொன்னார். அடுத்த சில நாட்களில் விஜயகாந்த் வீட்டின் முன்பு சிலர் பூஜை செய்திருந்த ஆதாரங்கள் கிடைத்தது.. மாந்திரீகம் செய்திருக்கலாம் என்பது என் கணிப்பு மட்டுமே.

ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் கடவுள் மற்றும் பூஜை விவகாரங்களில் அதிக ஆர்வம் உடையவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த செயலை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதுதான் காரணமா? என்றும் எனக்கு தெரியல. அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் கடுமையாக உழைக்கக் கூடியவர் தான். ஒரு முறை பகலில் சேலத்திலும் இரவில் சென்னையிலும் என தொடர்ந்து 40 நாட்கள் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதோடு வருடத்திற்கு 14 படங்களில் நடித்து வந்தார். சரியான ஓய்வு இல்லாமல் நடித்ததால் கூட விஜயகாந்தின் உடல்நிலை இப்படி பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அதுபோல அரசியலில் அவர் சந்தித்த நம்பிக்கை துரோகங்கள் அவரை தூங்கிவிடவில்லை. மன உளைச்சலை சந்தித்து இருந்தார் .ஒரு நாளைக்கு அரை மணி நேரம் தான் அப்போது தூங்கிக் கொண்டிருந்தார். எல்லாம் சேர்ந்துதான் அவருடைய உடல் நிலை இப்படி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த பேட்டியில் ராஜேந்திரன் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X