நடிகர் விஜயகுமார் வீட்டில் இன்னொரு டாக்டர் வந்தாச்சு..குவியும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் அம்மா எமோஷனல்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதாவின் மகன் ஸ்ரீ ஜெய் கோகுல் டாக்டர் படிப்பை முடித்திருக்கும் நிலையில் அதை பாராட்டி அனிதா பதிவு ஒன்று பகிர்ந்து இருந்த நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகுமார் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கும் நிலையில் அனிதா மட்டும் தான் டாக்டராக மாறி இருந்தார்.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் தான் அனிதா. இவர் மட்டும்தான் விஜயகுமாரின் வீட்டில் நடிப்பு துறையை விட்டு விட்டு படிப்பு துறையை தேர்ந்தெடுத்து டாக்டராக மாறி இருந்தார். அனிதாவை போலவே அவருடைய கணவரும் டாக்டர் தான். இருவரும் டாக்டர்க்கு படித்து கொண்டிருக்கும் போது தான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா மற்றும் ஸ்ரீ ஜெய் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இதில் சமீபத்தில் தான் தியாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதுபோல தியாவும் ஒரு டாக்டர் தான். தியா காதலித்து கல்யாணம் செய்த திலனும் ஒரு டாக்டர் தான். தியாவின் திருமணம் இணையத்தை பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. விஜயக்குமாரின் பேத்தி திருமணம் என்றதும் பல பிரபலங்கள் அவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு இருந்தனர்.
இப்படியான நிலையில் இந்த பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்த நேரத்தில் அடுத்ததாக விஜயகுமாரின் பேரன் டாக்டராக மாறி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அனிதா பகிர்ந்து இருக்கிறார். விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவிக்கு கவிதா, அனிதா, அருண்குமார் என்ற மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் விஜயகுமாருக்கு அவருடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த நேரத்தில் முத்துக்கண்ணுவை விவாகரத்து செய்திருந்த விஜயகுமார் மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

அதில் மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது அனிதாவின் மகன் தன்னுடைய குடும்பத்தில் அடுத்த டாக்டராக மாறி இருக்கும் மகிழ்ச்சியை அனிதா பகிர்ந்து இருக்கும் நிலையில் இதற்கு அதிகமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த வாழ்த்துக்களுக்கு மத்தியில் அனிதா தன்னுடைய மகன் குறித்து பெருமிதமும் கொண்டிருக்கிறார்.
அதோடு தன்னுடைய மகனின் வீடியோவை ஷேர் செய்த அனிதா ஒரு பெற்றோராக நாங்க இப்போ ரொம்பவே பெருமைப்படுகிறோம். அதோடு எங்கள் குட்டி இளவரசன் இப்போ டாக்டரா மாறிட்டாரு. உங்க கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி என்று எமோஷனலாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் அனிதாவின் மகளான தியாவும் தன்னுடைய தம்பியை பாராட்டி எங்க குடும்பத்தின் புது டாக்டரை வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ரீ ஜெய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Medicine student என்று இருந்த தன்னுடைய ப்ரொபைலை டாக்டர் என்று மாற்றி இருக்கிறார்.



Click it and Unblock the Notifications