Abirami: ஓணம் பண்டிகையில் மகளை காட்டிய நடிகை அபிராமி..பக்கத்திலேயே அந்த நபர்..குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: இன்று ஓணம் பண்டிகை விமர்சனமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் பல பிரபலங்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை அபிராமி தன்னுடைய குடும்பத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Actress Abhirami Onam festival is being celebrated as a festival

நடிகை அபிராமி 13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் அபிராமி அந்த குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை அபிராமி முதல் முதலாக நடிகர் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலம் அடைந்திருந்தார். இவருடைய சொந்த ஊர் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தானாம். ஸ்கூல், காலேஜ் படித்து முடித்ததும் மலையாளத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் அபிராமி நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

பிறகு தான் இவருக்கு பெரிய அளவில் கேரக்டர் அமைய தொடங்கி இருக்கிறது. அதுவும் முதலில் இவருக்கு கிடைத்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்ததும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு தமிழில் நடிக்க வந்த அபிராமிக்கு தொடக்கத்தில் அதிகமான வாய்ப்பு கிடைத்தது.

Actress Abhirami Onam festival is being celebrated as a festival

அந்த நேரத்தில் சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம் திரைப்படங்களிலும் அதுபோல பிரபு உடன் சார்லி சாப்ளின் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்திலேயே பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகு மற்றும் இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் தான் சரத்குமார் உடன் சேர்ந்து மூன்றாவது முறையாக சமஸ்தானம் என்ற திரைப்படத்தில நடிகை அபிராமி சேர்ந்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு நடிகர் கமலஹாசன் உடன் விருமாண்டி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் பெரிய அளவில் அபிராமியின் நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. அதுவும் இவருடைய வித்தியாசமான கெத்தான அன்னலட்சுமி கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

அதுவரைக்கும் அமைதியாகவும் காதல் காட்சிகளிலும் நடித்து வந்த அபிராமி விருமாண்டி திரைப்படத்தில் ஒரு திமிர் ஆன கேரக்டர் மூலமாக அனைவருடைய மனதிலும் நிறைந்து இருந்தார். அந்த நேரத்தில் இவர் இனி சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சினிமாவிற்கு கேப் விட்டு விட்டார்.

Actress Abhirami Onam festival is being celebrated as a festival

பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனின் மாறா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் 13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நடிகை அபிராமி பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு ஓணம் பண்டிகையை கொண்டாடி அபிராமி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X