Abhirami: திவ்யா, அபிராமியாக மாறியது இப்படி தானா? புல்லரித்த கமல் ரசிகர்கள்..சின்ன வயசிலேயே அப்படியாமே

சென்னை: நடிகை அபிராமியின் நிஜப்பெயர் திவ்யா தானாம்.. அவர் எதனால் தன்னுடைய பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டார் என்ற தகவல் பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

நடிகை அபிராமிக்கு ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் அதிகமாக பிடிக்குமாம்.

Actress Abhirami The information that why she changed her real name

இந்த நிலையில் தான் விருமாண்டி திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் நடித்தது மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல பிரபலங்களும் அடிப்படையில் சாதாரண ரசிகர்கள் போலத்தான் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரி தான் நடிகை அபிராமி தனக்கு பிடித்த கமல்ஹாசனுக்காக தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை செய்திருக்கிறார். அது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

நடிகை அபிராமி முதல் முதலாக நடிகர் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலம் அடைந்திருந்தார். இவருடைய சொந்த ஊர் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தானாம். ஸ்கூல், காலேஜ் படித்து முடித்ததும் மலையாளத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் அபிராமி நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

பிறகு தான் இவருக்கு பெரிய அளவில் கேரக்டர் அமைய தொடங்கி இருக்கிறது. அதுவும் முதலில் இவருக்கு கிடைத்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்ததும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு தமிழில் நடிக்க வந்த அபிராமிக்கு தொடக்கத்தில் அதிகமான வாய்ப்பு கிடைத்தது.

அந்த நேரத்தில் சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம் திரைப்படங்களிலும் அதுபோல பிரபு உடன் சார்லி சாப்ளின் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்திலேயே பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகு மற்றும் இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் தான் சரத்குமார் உடன் சேர்ந்து மூன்றாவது முறையாக சமஸ்தானம் என்ற திரைப்படத்தில நடிகை அபிராமி சேர்ந்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு நடிகர் கமலஹாசன் உடன் விருமாண்டி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் பெரிய அளவில் அபிராமியின் நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. அதுவும் இவருடைய வித்தியாசமான கெத்தான அன்னலட்சுமி கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும் சொரிமுத்து காளையை வளர்க்கும் கிராமத்து பெண்ணாக அந்த திரைப்படத்தில் அபிராமி நடித்திருந்தார். மிரட்டலான காட்சிகளில் மட்டுமல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளிலும் கமலுடன் சேர்ந்து இந்த திரைப்படத்தில் அபிராமி போட்டி போட்டு நடித்திருப்பார். அதனாலேயே இந்த திரைப்படத்தில் பல பாடல்களும் ஹிட்டானது.

ஆனால் விருமாண்டிக்குப் பிறகு அபிராமிக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்குள் கழித்து மாதவன் நடித்த மாறா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பல ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Actress Abhirami The information that why she changed her real name

அதில் நான் கமலின் தீவிரமான ரசிகை. நான் மட்டுமல்லாமல் எங்க குடும்பமே கமல்ஹாசனுடைய ரசிகர்கள்தான். என்னுடைய அம்மா, பெரியம்மா எல்லாரும் கமல் சார் படத்தை விரும்பி பார்ப்பார்கள். குணா படம் வந்த சமயத்தில் என்னுடைய பெயர் திவ்யா என்று தான் இருந்தது. அதற்கு பிறகு நான் நடிக்க வந்த போது என்னுடைய பெயரை அபிராமி என்று மாற்ற சொன்னது என்னுடைய சகோதரி தான்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய பெயர் என்ன என்று கேட்டார்கள் நான் யோசிக்காமல் அபிராமி என்று கூறிவிட்டேன் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது அபிராமி பேசிய இந்த வீடியோவை கமல்ஹாசனின் ரசிகர்கள் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X