Bigg boss Abhirami: அய்யய்யோ அபிராமி.. சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கசிந்த படுகவர்ச்சி போட்டோஸ்!
சென்னை: மாடலிங் துறையில் இருந்து வந்து, பின் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். நேர்கொண்ட பார்வை உட்படச் சில முக்கியத் படங்களிலும் நடித்துள்ள இவர், சோசியல் மீடியாவில் எப்போதுமே மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு பிரபலம் ஆவார்.
புதிய லுக்: தற்போது அபிராமி வெங்கடாசலமின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன. மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடைகளில், மிகவும் எதார்த்தமான அதேசமயம் வசீகரமான தோற்றத்தில் அவர் இருக்கும் அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. பொதுவாக இணையத்தில் நடிகையின் போட்டோக்கள் வெளியானாலே, இது ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படமா? என்ற சந்தேகம் எழுவது வழக்கம். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் அபிராமியின் இந்தப் படங்கள் எடிட்டிங் அல்லது 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக அவை உண்மையான போட்டோஷூட் படங்கள் என்பது பார்த்த உடனேயே தெளிவாகத் தெரிகிறது.

இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன்: இந்தப் புகைப்படங்கள் அபிராமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாகப் பகிரப்படவில்லை. இதனால், இவை எப்படி வெளியே வந்தன என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் ஒரு புதிய தகவல் பேசப்படுகிறது. பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் மற்றும் மாடல்கள் பலரும், தங்களது ரசிகர்களுடன் இணைந்திருக்க இன்ஸ்டாகிராமில் 'சப்ஸ்கிரிப்ஷன்' முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்தி சந்தாவில் சேரும் ரசிகர்களுக்கு மட்டுமே தங்களது பிரத்தியேகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து, அதன் மூலம் வருவாய் ஈட்டும் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த வகையில், அபிராமி தனது பிரத்தியேகச் சந்தாதாரர்களுக்குப் பகிர்ந்த புகைப்படங்கள், தற்போது Screen-grab செய்யப்பட்டு இணையத்தில் கசிந்திருக்கிறது.
காதலர் அறிமுகமும்: அபிராமி வெங்கடாசலம் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரை ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தொடர்ந்து, தற்போது அவரது இந்த கிளாமர் போட்டோஷூட் படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருவதால், பிக் பாஸ் அபிராமி பற்றிய பேச்சுகள்தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications