விஜய் டிவியில் இருந்து மற்றொரு சேனலுக்கு தாவிய ஆல்யா மானசா.. எந்த டிவி தெரியுமா?

சென்னை : சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.

இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காகாக இந்த தொடரின் இரண்டாவது பாகத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து தன்னுடைய அடுத்தப் பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். ஆனால் தற்போது மீண்டும் விஜய் டிவி தொடரில் இவர் நடிக்கவில்லை.

ராஜா ராணி தொடர்

ராஜா ராணி தொடர்

விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. தொடர்ந்து அதே சீரியலின் ஹீரோ சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

இரண்டாவது பிரசவம்

இரண்டாவது பிரசவம்


ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்துவந்த இவர், தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக அந்த தொடரில் இருந்து விலகினார். இவரது சீமந்தம் உள்ளிட்ட நிகழ்வுகளின் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.

 மீண்டும் சீரியலில் ஆல்யா

மீண்டும் சீரியலில் ஆல்யா

தற்போது ஆல்யா, மீண்டும் சீரியலில் களமிறங்க உள்ளார். அவர் மீண்டும் சீரியலில் குறிப்பாக விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலிலேயே அவர் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த அளவிற்கு அவர் ராஜா ராணி சீரியலில் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

சன் டிவியின் புதிய தொடர்?

சன் டிவியின் புதிய தொடர்?

இந்நிலையில் அவர் அடுத்ததாக சன் டிவியின் புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியின் முக்கியமான நடிகையாக பார்க்கப்பட்ட ஆல்யா, அந்த சேனலில் இருந்து தற்போது சன் டிவிக்கு தாவியுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்

தன்னுடைய கர்ப்ப காலத்தின்போது, குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஆல்யா மானசா. தன்னுடைய வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் இவர் புதிய தொடரில் களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X