Alya :சஞ்சீவை காதலிக்க காரணம் சொன்ன ஆலியா.. மகிழ்ச்சி வாழ்க்கைக்கும் காரணம் இதுதானாம்!
சென்னை : விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் தொடர்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சஞ்சீவை முதல் முறை பார்த்த சந்தர்ப்பம் மற்றும் அவருடனான காதல் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவுடனான காதல் குறித்து மனம் திறந்த ஆலியா : விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்தவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் இந்தத் தொடரில் இணைந்து நடித்ததன்மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சஞ்சீவுடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்தும், தங்களது முதல் சந்திப்பு குறித்தும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
முதலில் விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது சஞ்சீவை சந்தித்ததாகவும் அப்போது இவர் மிகவும் அழகாக இருக்கிறாரே என்று தோன்றியதாகவும் ஆலியா கூறியுள்ளார். தொடர்ந்து சஞ்சீவை அண்ணா என்றே தான் அழைத்ததாகவும் சில மாதங்கள் கழித்து, அவர் ராஜா ராணி தொடரில் நடிக்க வந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அப்போது சஞ்சீவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் உடனே அவர் என்ன ஆயிற்று என்று கேட்டதாகவும் ஆலியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சுயநினைவுக்கு தான் வந்ததாகவும் தன்னுடைய நிலையை நினைத்து தனக்கே வெட்கமாக போய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் என்ன நினைப்பாரோ என்று தோன்றியதாகவும் ஆலியா மேலும் கூறியுள்ளார். தொடர்ந்து தங்களுக்குள் ஏற்பட்ட புரிதல் காதலாக மலர்ந்ததாகவும் திருமணத்தில் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புரிதல் மற்றும் காதல் திருமணமான நிலையிலும் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுவரை தாங்கள் காதலித்து வருவதாகவும் தங்களுக்குள் எந்தவிதமான ஈகோவும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இருவரில் யார் கோபப்பட்டாலும் மற்றவர், உடனடியாக சமாதானப்படுத்தி விடுவதாகவும் ஆலியா தங்களது திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பேசியுள்ளார். இப்படித்தான் தங்களது வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இவர்கள் வெளியிட்டுவரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் இவர்களுக்கு அதிகப்படியான பாலோயர்களை பெற்றுத் தந்துள்ளது. தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து வருகிறார் ஆலியா மானசா. குழந்தை பிறப்பிற்கு பின்பு உடல் எடை கூடியிருந்த ஆலியா, தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











