Actress Ammu: அம்முவும், திரிஷாவும் "அந்த" விஷயத்தில் ஒன்னுதான்!
சென்னை: அம்முவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சின்னத் திரையில் தனக்கென தனி இடம் வகித்து வருபவர். சில சினிமாவிலும் தலை காட்டியுள்ளார்.
அம்முவின் முகம் அப்படியேதான் உள்ளது. அந்த அழகுச் சிரிப்பு, அருமையான நடிப்பு, எந்த வேடம் கொடுத்தாலும் பிரித்து மேய்வது என அம்மு அசத்திக் கொண்டுதான் உள்ளார்.
அம்முவிடம் உங்களுக்கு என்ன மாதிரியான ரோல் பிடிக்கும் என்றால் எனக்குப் பிடிக்காத ரோலே கிடையாது. நடிகை என்று வந்து விட்டால் எல்லா ரோலிலும் நடிக்க வேண்டும். அதுதான் அழகு என்று அழகாக கூறுகிறார்.

ரம்யா கிருஷ்ணன்
அம்மு நடித்த எந்த கதாபாத்திரமும் சோடை போனதில்லை. இவருக்கு சின்னத்திரை ரம்யா கிருஷ்ணன் என்று கூட செல்லப் பெயர் வைத்துள்ளனராம் ரசிகர்கள். ரொம்பப் பொருத்தமான பெயர்தான். அந்த அளவுக்கு நடிப்பிலும், அழகிலும் ரம்யாவுக்கு நிகரானவர்தான் அம்மு என்பதில் சந்தேகம் இல்லைதான்.

டான்ஸ் நடிப்பு
அம்முவுக்கு நடிப்பு எப்படிப் பிடிக்குமோ அதேபோல டான்ஸ் என்றாலும் அவருக்கு உயிர். அவர் ஒரு தேர்ந்த பரதநாட்டிய கலைஞர் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதே போல அவருக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு விஷயம் முதுகுக்கு பின்னால் பேசுவது. அது புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி அவர் எப்போது பின்னால் நின்று பேசுவைத விரும்புவதில்லை.

மனசுதான் காரணம்
எப்படிங்க இந்த டென்ஷனான வாழ்க்கையை சமாளிக்கிறீங்க என்று கேட்டால், அதெல்லாம் ஒரு கலை. எல்லாமே நம்ம மனசுதான் காரணம். மனசை லேசா வச்சிக்கிட்டா எல்லா கவலையும் ஓடிரும். பதட்டமும் அண்டாது. டென்ஷன் யாருக்குத்தான் இல்லை. ஆனால் அதை கையாளுவதில்தான் நமது திறமை இருக்கிறது. நான் அதில் ரொம்ப கவனமா இருப்பேன் என்றார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்
சமீபத்தில் கூட விஜய் டிவியில் முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் இவரால் அடையாளம் காணப்பட்ட இளம் பாடகர்தான் விருது பெற்று அசத்திதனார். அந்த அளவுக்கு தான் மட்டுமல்லாமல், தன்னைப் போன்ற திறமையுள்ள யாருக்கும் கை கொடுக்க இவர் தவறுவதில்லை. அப்படி ஒரு வெள்ளை மனசு நம்ம அம்முவுக்கு.

திரிஷா அம்மு
அப்புறம் ஒரு விஷயங்க.. அம்முவுக்கு நாய்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் தெருக்களில் அனாதரவாக விடப்படும் நாய்களைக் கண்டால் மனசெல்லாம் வலித்து விடும். உடனே அதைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளில் குதித்து விடுவார். இந்த விஷயத்தில் இவரும் திரிஷாவைப் போலத்தான். பெட் அனிமல் என்று பார்க்காமல் அதுவும் உயிர். அதைக் காப்பதும் நமது கடமை என்று செயல்படுபவர் அம்மு.
அம்மாக்களின் மனதில் உள்ள ஈரம் அம்முவிடமும் இருப்பது பாராட்டுக்குரியதே.


Click it and Unblock the Notifications











